- Advertisement -
Homeபொழுதுபோக்குநாட்டாமை படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது குஷ்பூ அல்ல, பல ஆண்டுகளுக்கு பின்...

நாட்டாமை படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது குஷ்பூ அல்ல, பல ஆண்டுகளுக்கு பின் உண்மையை சொன்ன இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார்

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஜனரஞ்சகமான படங்களை தரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் கேஎஸ் ரவிக்குமார். ரஜினி, கமல், விஜய் என முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் முன்னணி இயக்குனர். ரஜினிகாந்த் நடிப்பில் படையப்பா, முத்து உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர்.

புத்தம் புது பயணம் படம் மூலம் அறிமுகமான கேஎஸ் ரவிக்குமார், பல படங்களை இயக்கியதோடு, அதில் சில படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். சில படங்களில் கேமியோ ரோல் செய்திருக்கிறார். அவர் இயக்கிய படங்களில் ஏதேனும் ஒரு காட்சியில் வந்துவிடுவது கேஎஸ் ரவிக்குமார் வழக்கம்.

சமீபகாலமாக படங்களை இயக்குவதை குறைத்துக்கொண்ட கேஎஸ் ரவிக்குமார், குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக கூகுள் குட்டப்பா, தங்க மகன், ரெமோ, அயோக்யா, கோமாளி, ஜப்பான் என பல படங்களில் நடித்து வருகிறார்.

கேஎஸ் ரவிக்குமார் பிஸியாக இருந்த காலகட்டத்தில் நடிகர் சரத்குமாருக்கு அவர் இயக்கிய படங்கள் பெரிய அளவில் அவரது சினிமா பயணத்தில் முக்கிய படங்களாக அமைந்தன. குறிப்பாக சேரன் பாண்டியன், நாட்டாமை, நட்புக்காக உள்ளிட்ட படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். இந்த 3 படங்களுமே சரத்குமாருக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்த படங்களாக அமைந்தன.

நாட்டாமை படத்தில், சரத்குமார் அண்ணன், தம்பி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இதில் அண்ணனுக்கு குஷ்பூவும், தம்பிக்கு மீனாவும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு உதவியது கவுண்டமணி, செந்தில் காமெடி தான். இந்த படத்தில் நடிக்க சரத்குமார் சம்பளமும் 10 லட்சம் ரூபாய், கவுண்டமணி சம்பளமும் 10 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது, நாட்டாமை படத்தில், அண்ணன் சரத்குமார் கேரக்டருக்கு ஜோடியாக குவு்பூ நடித்திருந்தார். ஆனால் அந்த கேரக்டரில் முதலில் நான் நடிக்க வேண்டும் என திட்டமிட்டது நடிகை லட்சுமியை தான். ஆனால் சில காரணங்களால் லட்சுமி நடிக்க முடியாமல் போனதால்தான், குஷ்பூ அந்த கேரக்டரில் நடித்தார் என்று கூறியிருக்கிறார். பிறகு படையப்பா படத்தில் சிவாஜிக்கு மனைவியாக, ரஜினிக்கு அம்மாவாக லட்சுமி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்