- Advertisement -
Homeபொழுதுபோக்குபார்த்த ஞாபகம் இல்லையோ…? பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் - எதிர்நீச்சல் படத்தில் பட்டு மாமியாக...

பார்த்த ஞாபகம் இல்லையோ…? பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் – எதிர்நீச்சல் படத்தில் பட்டு மாமியாக வாழ்ந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையாக வலம் வந்தவர் சௌகார் ஜானகி. தனது 94 வயதில் உடல் மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று மதியம் காலமானார். வயது மூப்பால் உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து வந்த சௌகார் ஜானகி இன்று மதியம் 2 மணியளவில் மறைந்தார். கடந்த 1952ம் ஆண்டில் வளையாபதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சௌகார் ஜானகி.எந்தவிதமான கேரக்டர் என்றாலும் அதில் தனது சிறந்த நடிப்பை ரசிகர்களுக்கு தரும் சிறந்த நடிகையாக அவர் இருந்தார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் பணம் படுத்தும் பாடு புதிய பறவை நீர்க்குமிழி மகாகவி காளிதாஸ் எதிர்நீச்சல் இரு கோடுகள் உயர்ந்த உள்ளம் காவியத்தலைவி தங்கராட்டிணம் தில்லுமுல்லு வெற்றி விழா ஹே ராம் உள்ளிட்ட பல படங்களில் சௌகார் ஜானகி நடித்திருக்கிறார்.

குறிப்பாக எதிர்நீச்சல் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மனைவியாக பட்டு மாமி கேரக்டரில் அவர் அசத்தலாக நடித்திருப்பார். அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா பாடல் காட்சியை தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாது. அதே போல் புதிய பறவை படத்தில் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடலிலும் அவரது முகபாவனைகளை ரசிகர்களால் மறக்க முடியாது.

- Advertisement -

மேலும் தில்லு முல்லு படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்து தேங்காய் சீனிவாசனை ஏமாற்றும் அந்த ஒரு கேரக்டரிலும் தனது காமெடியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல்வேறு மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் சௌகார் ஜானகி நடித்திருக்கிறார்.

கடைசியாக நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த பிஸ்கோத் என்ற படத்தில் தமிழில் செளகார் ஜானகி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகை சௌகார் ஜானகி உடல்நலம் குன்றிய நிலையில் இன்று மறைந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்