- Advertisement -
Homeபொழுதுபோக்குரயில் பயணத்தின் போது நடந்த அந்த சம்பவம்… ஜன்னல் வழியாக அதைக் கேட்ட மர்ம நபர்...

ரயில் பயணத்தின் போது நடந்த அந்த சம்பவம்… ஜன்னல் வழியாக அதைக் கேட்ட மர்ம நபர் – விஜய் பட நடிகைக்கு இப்படி ஒரு மோசமான அனுபவமா?

- Advertisement -

மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். தமிழில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் படத்தில் வில்லி கேரக்டரில் இவரது நடிப்பு மிரட்டியது. தற்போது பிரபாஸ் நடிக்கும் ராஜாசாப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நடிகை மாளவிகா மோகனன் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் கூட அவரது தந்தை ஒளிப்பதிவாளர் மோகனன் பாலிவுட்டில் அதிக படங்களில் பணியாற்றியவர். அதனால் மாளவிகா மோகனன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு எல்லாமே மும்பையில் தான் படித்திருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை மாளவிகா மோகனன் மும்பையில் கல்லூரியில் அவர் படித்தபோது தனக்கு ஏற்பட்ட ஒரு மோசமான சம்பவம் குறித்து வெளிப்படையாக கூறியிருக்கிறார். ரயிலில் வந்த போது அவருக்கு இந்த ஒரு கசப்பான அனுபவம் கிடைத்திருக்கிறது. அதை இன்று வரை மறக்காமல் அவர் இருந்து வருகிறார்.

இதுகுறித்து நடிகை மாளவிகா மோகனன் கூறியதாவது, ஒரு நாள் நானும் எனது தோழிகளும் கல்லூரியிலிருந்து மின்சார ரயிலில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்போது இரவு 7 மணி இருக்கும். ஃபர்ஸ்ட் கிளாஸ் என்பதால் அந்தக் கம்பார்ட்மெண்டில் எங்கள் 3 பேரை தவிர வேறு யாருமில்லை.

அதனால் ஜன்னல் கம்பியில் முகத்தை வைத்தபடி நான் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்ற போது திடீரென என் முன்னால் தோன்றிய ஒரு மர்ம நபர் என் முகத்தருகே அவனுடைய முகத்தை கொண்டு வந்து ஒரு முத்தம் கொடு என்று கேட்டான். இந்த எதிர்பாராத நிகழ்வால் நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். மேலும் அந்தக் கம்பார்ட்மெண்டில் நாங்கள் 3 பேர் மட்டுமே இருந்தோம் என்பதால் ஒருவேளை அவன் திடீரென உள்ளே ஏறிவிட்டால் என்ன செய்வது என்றும் திகைத்துப் போய் விட்டேன்.

அந்த வயதில் இந்த நிகழ்வுக்கு எப்படி எதிர்வினை செய்வது என்பது கூட உடனடியாக எனக்குத் தோன்றவில்லை. நல்ல வேளையாக ரயில் அங்கிருந்து கிளம்பி விட்டதால் தப்பித்தோம். இருந்தாலும் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேல் அந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை. இப்போது மும்பை பாதுகாப்பான நகரம் என சொன்னாலும் நான் அங்கே படித்த காலத்தில் அப்படி இருந்ததில்லை. பயத்துடன்தான் பஸ்சிலும் ரயிலிலும் பயணித்தோம் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்