தமிழ் சினிமாவில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் மணிகண்டன் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்ற ஒரு சிறந்த திரைக்கலைஞனாக இருக்கிறார். இவர் விழா மேடைகளில் ரஜினி கமல் அஜீத்குமார் ஜனகராஜ் போல அவர்களது குரலில் பேசிய ரசிகர்களை ஆச்சரியப்படவும் வைத்திருக்கிறார்.
ஜெய் பீம் படத்தில் நடிகர் மணிகண்டனின் நடிப்பு வேற லெவலில் இருக்கும். அப்படி ஒரு அற்புதமான அசுரத்தனமான நடிப்பை தந்திருப்பார். நடிகர் ரஜினி நடித்த காலா படத்தில் அவரது 3 மகன்களில் ஒருவராக மணிகண்டனின் நடிப்பு தனியாக இருக்கும். அப்பா – மகன் உணர்வுகளை பிரதிபலிப்பதாக அவரது கேரக்டர் சிறப்பாக இருந்தது.
குட்நைட் லவ்வர் படங்களில் நாயகனாக நடித்த மணிகண்டன், திரைக்கதை கதை வசனம் எழுதுபவர். பல படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறார். இவர் ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. நித்தம் ஒரு வானம் படத்தை தயாரித்த நிறுவனம் சினிமாக்காரன். இந்த நிறுவனம் தயாரிப்பில் குடும்பஸ்தன் என்ற படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்துள்ளார்.
குடும்பஸ்தன் படத்தை நக்கலைட் யூடியூப் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில்தான் நடிகர் சிம்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நக்கலைட்ஸ் யூடியூப் இணையத்தில் மிக பிரபலமானது. லப்பர் பந்து படத்தில் கெத்து தினேஷின் குடிகார நண்பராக வரும் ஜென்சன் திவாகர் நக்கலைட்ஸ் குரூப் சேர்ந்தவர்தான்.
குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டன் சான்வி மேக்னா குரு சோமசுந்தரம் ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு வைஷாக் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இப்போது போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
ஜெய்பீம் குட்நைட் லவ்வர் படங்கள் வெற்றியை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் வெளியாகும் குடும்பஸ்தன் படம் குறித்த எதிர்பார்ப்பும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம், தங்களது எக்ஸ் பக்கத்தில் குடும்பஸ்தன் படம் வரும் 24ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் இருந்து ஜீரோ பேலன்ஸ் ஹீரோ பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.





