- Advertisement -
Homeபொழுதுபோக்குவேற லெவலில் சம்பவம் செய்த நடிகர் மணிகண்டன் - 4 நாட்களில் எகிறிய குடும்பஸ்தன் படத்தின்...

வேற லெவலில் சம்பவம் செய்த நடிகர் மணிகண்டன் – 4 நாட்களில் எகிறிய குடும்பஸ்தன் படத்தின் வசூல், போடு வெடிய!

- Advertisement -

திறமையும் அயராத உழைப்பும் இருந்தால் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. குறிப்பாக சினிமாத் துறையில் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமா சார்ந்தவர்களின் சிபாரிசு இல்லாமல் சுயம்புவாக சினிமாவுக்குள் நுழைந்து வெற்றி பெற்ற பல முன்னணி நடிகர்களை தமிழ் சினிமா பார்த்திருக்கிறது.

அந்த வகையில் நடிகர்கள் ரஜினிகாந்த் விஜயகாந்த் சிவகார்த்திகேயன் சூரி விஜய் சேதுபதி போன்றவர்களின் வரிசையில் இப்போது நடிகர் மணிகண்டனும் இணைந்து இருக்கிறார். காலா ஜெய்பீம் குட்நைட் லவ்வர் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அவர் தற்போது ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற படத்தில் நவீன் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த 25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் தொடர்ந்து ரசிகர்கள் இந்த படத்தைக் காண தியேட்டர்களுக்கு செய்த குடும்பம் குடும்பமாக செல்கின்றனர். மிடில் கிளாஸ் குடும்பங்களின் கதையாக இந்தபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

எப்போதுமே பேமிலி ஆடியன்ஸ் விரும்புகிற படமாக ஒரு படம் அமைகிற பட்சத்தில் அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படிதான் கடந்தாண்டில் வெளிவந்த அரண்மனை 4 ராயன் மகாராஜா தி கோட் அமரன் லக்கி பாஸ்கர் போன்ற பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

- Advertisement -

இப்போது நடப்பாண்டில் 2025ல் துவக்கத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் வெளிவந்து கொண்டிருப்பது இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்கள் வருவதற்கான அறிகுறியாக முன்னோட்டமாக இருக்கிறது அந்த வகையில் இந்த ஆண்டில் வெளியான மதகஜ ராஜா படம் பெரிய வெற்றியை பெற்று 50 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது.

அதேபோல் இப்போது நடிகர் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் படமும் அபரிமிதமான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது. இந்த சூழலில் கடந்த 25ம் தேதி வெளியான குடும்பஸ்தன் படம் நான்கே நாட்களில் 8.7 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. வரும் நாட்களில் இந்த வசூல் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல நடிகராக மட்டுமின்றி வசூல் நடிகராகவும் மணிகண்டன் எதிர்காலத்தில் மாறுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

சற்று முன்