நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரப் போகும் படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் மட்டுமே வௌிவர உள்ள நிலையில், 2ம் பாகமும் இயக்கப்பட உள்ளது. இந்த 2ம் பாகத்தில் சூர்யாவுக்கு மெயின் வில்லனாக நடிக்கப் போகிறவர் அவரது தம்பி நடிகர் கார்த்தி தான். கங்குவா முதல் படத்தின் இறுதியிலேயே, விக்ரம் பட ரோலக்ஸ் சூர்யா போல, கார்த்தி அதிரடியாக கேமியோ ரோலில் வர இருக்கிறார்.
இப்படி அண்ணன் சூர்யா படத்தில் தம்பி கார்த்தியே வில்லனாக நடிப்பது, ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில், கார்த்தியும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தில், முன்னணி ஹீரோவாக இருப்பவர். இப்படி வில்லனாக நடிப்பதால் அவரது சினிமா எதிர்காலம் பாதிக்கப்படுமா, என்ற கேள்வியும் பலருக்கும் எழுந்துள்ளது.
எனினும் ரஜினிகாந்த், சத்யராஜ் போன்றவர்கள் வில்லன்களாக நடிக்கின்றனர். சமீபத்தில் கமலும் கல்கி படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். விஜய் அழகிய தமிழ் மகன் படத்தில் வில்லன் கேரக்டர் செய்திருந்தார். நடிகர் விஷாலும் தெலுங்கு படம் ஒன்றில், அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்டு இருக்கிறார் என்ற நிலையில், கார்த்தியும் இந்த விஷ பரீட்சகை்கு தயாராகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
நேற்று நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாடினர். சமூக வலைதளங்களிலும், பத்திரிகைகளிலும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் குவிந்தன. பலரும் அவருக்கு தங்களது பிரியமான பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இதனால் நேற்று முழுவதும் சோஷியல் மீடியாவில் சூர்யா அதிகமாக ஆக்கிரமித்திருந்தார்.
மேலும் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு, கங்குவா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது. ஆனால் அதை பெரும்பாலானவர்கள் அம்மன் பாட்டு போல இருக்கிறது என்று விமர்சித்து விட்டனர். ஆனால் உண்மையில் குலதெய்வ சுவாமி வழிபாடு போல தான் அந்த பாடலும், பாடல் காட்சியும் இருப்பதை ரசிகர்கள் ஒத்துக்கொண்டு உள்ளனர்.
இதற்கிடையே நேற்று நடிகர் சூர்யாவுக்கு பல தரப்பில் இருந்தும் பிறந்த நாள் வாழ்த்துகள் குவிந்த நிலையில், கேவிஎம் புரடக்சன்ஸ் என்னும் படத் தயாரிப்பு நிறுவனமும் வாழ்த்துகளை தெரிவித்திருந்தது. இந்த நிறுவனம், நடிகர் விஜய் நடிக்கும் 69வது படத்தை தயாரிக்கப் போகும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவுக்கு அந்நிறுவனம் தானாக முன்வந்து பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியிருப்பதால், இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிப்பது உறுதியாகி உள்ளது. இதற்காக சூர்யா, அட்வான்ஸ் கூட வாங்கியிருக்கலாம். விரைவில், இயக்குனர் யார் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக வெளியாக வாய்ப்புள்ளது.





