தமிழ் தெலுங்கு இந்தி மொழி திரைப்படங்கள் என்பது அதிக கமர்ஷியல் நோக்கம் கொண்டது. முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் ஹீரோயிசம் நிறைந்த படங்களாகவே இருக்கும். கேங்ஸ்டர்ஸ் பழிவாங்கும் கதைக்களத்தில் படங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். நாயகிகள் பெரும்பாலும் கவர்ச்சி பொம்மைகளாகவே படத்தில் காட்டப்படுவர்.
அதனால் பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படங்கள் போட்ட பட்ஜெட்டை விட 2 மடங்கு 3 மடங்கு என வசூலை அள்ளிவிடும். அதனால் ரூ. 100 கோடிக்கு மேல் மிக எளிதாக தியேட்டர்கள் ஷேர் கொடுத்தும் விடுகிறது. ஏனெனில் வருமானத்தை லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட படங்களே தமிழ் தெலுங்கு இந்தி மொழிகளில் அதிகமாக வருகின்றன.
ஆனால் இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது மலையாள சினிமா. இங்கு ஹீரோயிசம் பேசும் படங்களுக்கு அதிக வாய்ப்பு இருக்காது. கதைதான் எப்போதுமே ஹீரோவாக இருக்கும். கேரக்டருக்காக தான் நாயகனே தவிர, நாயகனுக்காக மலையாள சினிமாவில் கேரக்டர்களை உருவாக்குவது இல்லை. அதனால் கதையே இங்கு பிரதானமாக இருக்கிறது.
நடிகர் பிருத்விராஜ் இயக்குனராக மாறி இயக்கிய முதல்படம் லூசிபர். கடந்த 2019ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நாயகனாக மோகன்லால் நடித்திருந்தார். அந்த படத்தின் தொடர்ச்சியாக நடிகர் பிருத்விராஜ் இயக்கிய படம் எல்2 எம்புரான். மோகன்லால் நடித்த இந்த படத்தில் பிருத்விராஜூம் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
உலகம் முழுவதும் பலத்த வரவேற்பை பெற்ற இந்த படம், கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. இப்போது 10 நாட்களில் எல்2 எம்புரான் படம் 245 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. மலையாள சினிமா வரலாற்றில் எந்த ஒரு படமும் இப்படி ஒரு வசூல் சாதனையை புரிந்தது இல்லை. ஏனெனில் மலையாள படங்களின் பட்ஜெட்டும் மிக குறைவு. வசூலும் ரூ. 50 கோடி என்றாலே அதிகம்தான்.
இப்படிப்பட்ட சூழலில் எல்2 எம்புரான் படம் ரிலீஸான 10 நாட்களில் ரூ. 245 கோடி வரை வசூலித்து மகத்தான சாதனை புரிந்திருக்கிறது. மேலும் தியேட்டர் ஷேர் ஆக ரூ. 100 கோடி ரூபாய் தந்திருக்கிறது. மலையாள சினிமாவில் தியேட்டர் ஷேர் ரூ. 100 கோடி கொடுத்த முதல் படம் எல்2 எம்புரான் என்ற சாதனைையும் நடிகர்கள் மோகன்லால், பிருத்விராஜ் இருவரும் நிகழ்த்தி காட்டியிருக்கின்றனர். அவர்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.





