- Advertisement -
Homeபொழுதுபோக்குயோகிபாபுவுக்கு அடித்தது ஜாக்பாட் பிரைஸ், அவருக்கு ஜோடியாக இந்த நடிகையா, நொந்து போன ரசிகர்கள் -...

யோகிபாபுவுக்கு அடித்தது ஜாக்பாட் பிரைஸ், அவருக்கு ஜோடியாக இந்த நடிகையா, நொந்து போன ரசிகர்கள் – என்ன கொடுமை சார் இது?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடப்பது பல நேரங்களில் மேஜிக் ஆக இருக்கிறது. சில நேரங்களில் அதுவே டிராஜிடியாகவும் மாறி வருகிறது. ஒரே படத்தில், ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகர்களாக மாறியவர்களும், பல படங்களில் நடித்தும், போதிய கவனத்தை பெறாமல் போன நடிகர்களும் உண்டு.

நடிகர் யோகி பாபு, துணை நடிகராக பல படங்களில் சில காட்சிகளில் நடித்தார். ஒரு கட்டத்தில், நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் மனங்களை வென்றார். குறிப்பாக, காக்கா முட்டை, ரெமோ, கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், தர்பார் போன்ற பல படங்களில் யோகிபாபு நல்ல வரவேற்பை பெற்றார்.

- Advertisement -

இதையடுத்த, மடோனா அஸ்வின் இயக்கத்தில், மண்டேலா என்ற படத்தில், படத்தின் கதை நாயகனாக யோகிபாபு நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. சலூன் கடைக்காரரான அவரது ஒரு ஓட்டுக்காக, இரு தரப்பு கட்சியினர் போராட்டமே அந்த படத்தின் மையக்கருவாக இருந்தது, மிகவும் சுவாரசியமான கதையம்சம் கொண்ட படமாகவும் வெற்றி பெற்றது.

அதன்பின் கூர்கா, தர்மபிரபு உள்ளிட்ட படங்களில் நடித்த யோகிபாபு, சபரிமலையில் எடுக்கப்படும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். நடிகை சித்தாரா, யோகிபாபுவின் தாயாக நடித்திருக்கும் இந்த படம், தாய் – மகன் பாசத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது.

- Advertisement -

மற்றொரு புதிய படத்தில், யோகிபாபுவுக்கு மனைவியாக நடிக்க, நடிகை லட்சுமிமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அவர், யோகிபாபுவின் மனைவியாக நடிக்க சம்மதித்திருப்பது அவரது ரசிகர்களிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமி மேனன் கார்த்தி, சசிக்குமார், விஜய் சேதுபதி, விஷால், விக்ரம் பிரபு ஆகியோரது படங்களில் ஜோடியாக நடித்த அவர், இடையில் சில ஆண்டுகள் காணாமல் போனார். மீண்டும் ரீ என்ட்ரி ஆன லட்சுமி மேனன், புலிக்குத்தி பாண்டியன், சந்திரமுகி 2 படங்களில் நடித்தும் போதிய வரவேற்பு கிடைக்காமல், இப்போது காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிப்பதுதான் சோகம். இதுதான் தமிழ் சினிமாவில் டிராஜிடியாக இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்