- Advertisement -
Homeபொழுதுபோக்குலால்சலாம் பராசக்தி டாக்ஸிக்… தொடர்ந்து மண்ணை கவ்வும் பெண் இயக்குனர்களின் படங்கள் - ஏமாந்து போகும்...

லால்சலாம் பராசக்தி டாக்ஸிக்… தொடர்ந்து மண்ணை கவ்வும் பெண் இயக்குனர்களின் படங்கள் – ஏமாந்து போகும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

ஆணுக்கு பெண் சமம் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்ற கருத்துகளை உணர்வுகளை இன்றளவில் ஆண் சமுதாயம் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு தான் இருக்கிறது. கல்வியில் பணியில் தொழிலில் வியாபாரத்தில் சகல இடங்களிலும் ஆண்களுக்கு பெண்கள் இணையானவர்களாக மாறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அது சினிமாத்துறையிலும் தொடரவே செய்கிறது. நடிகைகள் பின்னணி பாடகிகள் நடன கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் என்பது மட்டுமின்றி சினிமாவில் இயக்குனராகவும் பலர் ஜொலித்து வருகின்றனர். டிபி ராஜலட்சுமி என்பவர் 1936ம் ஆண்டில் மிஸ் கமலா என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இவர்தான் தமிழில் மட்டுமின்றி இந்திய சினிமாவில் முதல் பெண் இயக்குனர் என்று சொல்லப்படுகிறது.

மேலும் சித்ராங்கி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பெண் இயக்குனர் விஜய நிர்மலா அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற கின்னஸ் சாதனை படைத்தவர் என்றும் கூறப்படுகிறது. அந்த வரிசையில் இயக்குனர் சுதா கொங்கரா இறுதிச்சுற்று சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கியவர். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான படம் பராசக்தி.

இயக்குனர் காயத்ரி ( புஷ்கர் காயத்ரி) தனது கணவருடன் இணைந்து ஓரம்போ வ குவார்ட்டர் கட்டிங் மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அந்த வரிசையில் பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம் சில்லுக்கருப்பட்டி பூவரசம் பீப்பி ஏலே மின்மினி ஆகிய படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். குணச்சித்திர நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆரோகணம் நெருங்கி வா முத்தமிடாதே அம்மணி ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களை டைரக்ட் செய்திருக்கிறார்.

அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் நடித்த 3, வை ராஜா வை லால் சலாம் ஆகிய படங்களை டைரக்ட் செய்து இருக்கிறார். சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கிருத்திகா உதயநிதி வணக்கம் சென்னை காளி காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். அந்த வரிசையில் நடிகை கீது மோகன் தாஸ் தற்போது டாக்ஸிக் என்ற படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார்.

பெண் இயக்குனர்கள் இயக்கிய பெரும்பாலான படங்கள் காட்டு மொக்கை படங்களாக படுதோல்வியை சந்தித்துள்ளன. ஒரு சில படங்கள் தவிர மற்ற படங்கள் எல்லாமே ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றங்களை தந்த படங்களாக தான் இருக்கின்றன. அதுவும் டாக்ஸிக் லால் சலாம் பராசக்தி போன்ற பலத்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான படங்கள் எல்லாம் மிக மோசமான தற்குறி படங்களாக ரசிகர்களை ஏமாற்றியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்