தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. சில மாதங்களுக்கு முன் குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 100 கோடி ரூபாய் வசூலித்த பாக்ஸ் ஆபீஸ் லிஸ்ட்டிலும் இணைந்தது.
கடந்த சில ஆண்டுகளாக விஜய் சேதுபதிக்கு பெரிய அளவில் வெற்றிப் படங்கள் இல்லாத நிலையில், மகாராஜா படம் கொடுத்த மாபெரும் வெற்றி, மறுபடியும் அவரை பிஸியாக்கி விட்டது. இப்போது பாண்டிராஜ் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மதுரையில் அந்த படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பிலும் விஜய் சேதுபதி அடிக்கடி கலந்துக்கொள்கிறார். அந்த படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், வரும் டிசம்பர் 20ம் தேதி விடுதலை 2 ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது, விடாமுயற்சி படப்பிடிப்பை போலவே, விடுதலை 2 படப்பிடிப்பும் 2 ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்துக்கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே விஜய் சேதுபதி விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை அவர் விலகி விட்டார். அதனால் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி நடத்தி வருவதால், வாரத்தில் 2 நாட்கள் அதுக்காக ஒதுக்கி வருகிறார்.
இந்த சூழலில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஏற்கனவே கமிட் ஆகியிருந்தார். வளரும் நடிகராக இருந்த விஜய் சேதுபதிக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் பெரிய வெற்றியை தேடித் தந்தது. அவரது அடுத்தடுத்த வெற்றிப் படங்களுக்கு அது முக்கிய காரணமாக அமைந்தது.
ஆனால் முன்னணி நடிகராக உயர்ந்த நிலையில், நன்றி மறவாத ஒரு செயலாக இயக்குனர் பாலாஜி தரணிதரன் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் அட்லி தயாரிக்கிறார். இந்தியில் ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அப்போது ஏற்பட்ட நெருக்கமான நட்பின் காரணமாக, விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தை அட்லி தயாரிக்க முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





