- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதுதான் ஜனநாயகன் படத்தின் கதைக்களம்… நீங்க நினைக்கிற மாதிரியான அனல் பறக்கிற படமாக அது இருக்காது...

இதுதான் ஜனநாயகன் படத்தின் கதைக்களம்… நீங்க நினைக்கிற மாதிரியான அனல் பறக்கிற படமாக அது இருக்காது – சுடச்சுட வெளியான லேட்டஸ்ட் தகவல் இதுதான்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் எச் வினோத்துக்கு இருக்கிற சிறப்பம்சம் என்ன என்றால் குறிப்பிட்ட தேதிக்குள் குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தை எடுத்து முடிப்பதுதான் இவரது ஸ்பெஷாலிட்டி. ஆனால் ஜனநாயகன் படத்தை பொருத்த வரை இதில் எச் வினோத் அப்படி செயல்பட முடியவில்லை.

ஜனநாயகன் படத்தை 110 நாட்களுக்குள் முடிக்க எச் வினோத் திட்டமிட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்ப முடிய 148 நாட்கள் ஆகியுள்ளது. இயக்குனர் எச் வினோத் திட்டமிட்டதை விட 38 நாட்கள் அதிகமாக ஷூட்டிங் நடந்துள்ளது. அதனால் நிச்சயமாக பட்ஜெட்டும் நிச்சயமாக அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

இதற்கு காரணம் விஜய் அரசியல் சார்ந்த சில காட்சிகளும் தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடப்பது போன்ற காட்சிகளும் எடுக்கப்பட்டதால்தான் இந்த 38 நாட்கள் கூடுதலாக ஆகியுள்ளது. மற்றபடி விஜய் கேட்டுக்கொண்டதால் இயக்குனர் தட்ட முடியாமல் செய்திருக்கிறார்.

ஜனநாயகன் என படத்தின் டைட்டில் இருப்பதால் அரசியல் களத்தில் படத்தில் விஜய் அனல் தெறிக்க விடப் போகிறார். அரசியல் பஞ்ச் டயலாக்குகள் வெறித்தனமாக இருக்கும் என்றும் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் நினைத்துள்ளனர். ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க பகவந்த் கேசரி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படமாக மட்டுமே உருவாகி உள்ளது.

- Advertisement -

பெண்களுக்கான குட் டச் பேட் டச் என்ற விஷயத்தை மட்டுமே மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. விஜய் படம் என்பதால் படத்தின் ஆரம்ப காட்சி, இடைவேளை காட்சி, ப்ரீ கிளைமேக்ஸ் காட்சி என 3 இடங்களில் மட்டுமே பகவந்த் கேசரி படத்தில் இருந்து இது சற்று மாறுபட்டு இருக்குமே தவிர மற்றபடி அதே படத்தின் கதைக்களத்தில்தான் ஜனநாயகன் வரப்போகிறார்.

ஆனாலும் விஜய் அரசியல் களத்தில் நிற்பதாலும் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளதாலும் ஒரு பகுதியில் மட்டும் அரசியல் காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த பகுதி மட்டுமே அரசியல் சார்ந்த வசனங்கள் இருக்கும் என்றும் மற்றபடி இது ஒரு ஜனரஞ்சகமான படமாக மட்டுமே இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்