- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்… போட்றா வெடிய...

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்… போட்றா வெடிய என குதூகலித்த பிக்பாஸ் ரசிகர்கள்!

- Advertisement -

கண்களுக்கு முன்பே நடப்பது நல்லதோ கெட்டதோ எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் மனிதர்களுக்கு அதை வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடிக்கவும். குறிப்பாக சண்டை தகராறு வாக்குவாதம் போன்ற விஷயங்களை பார்ப்பதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். குழாயடி தெருவோர சண்டைகளை பார்ப்பதே பலருக்கும் அலாதியான சுகம்தான்.

இதை தான் இப்போது நவீனப்படுத்தி பிக்பாஸ் ஹவுஸ் என்ற ஒரு வீட்டுக்குள் 20 பேரை விட்டு 100 நாட்கள் வரை அவர்களை தங்க வைத்து, அவர்களுக்குள் ஏற்படும் சண்டை சச்சரவுகளை பிரச்னைகளை முட்டல் மோதல்களை டாஸ்க் என்ற பெயரில் மேலும் கொளுத்திப் போட்டு தூண்டிவிட்டு நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்வதே பிக்பாஸ் நிகழ்ச்சியாக உள்ளது.

- Advertisement -

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கியது. 2023ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளாக 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக வந்து நடத்தினார். தொடர்ந்து 8ம் ஆண்டில் பிக்பாஸ் 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இப்போது 2025ம் ஆண்டில் நடக்க உள்ள பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியையும் நடிகர் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்க உள்ளார்.

இதுவரை பிக்பாஸ் சீசன் 9 குறித்த இரண்டு பிரமோ வீடியோக்கள் வெளியாகி விட்டன. முதலில் 15 நொடிகள் மட்டுமே ஓடும் ஒரு வீடியோவில் சோபா ஒன்றில் விஜய் சேதுபதி பலத்த யோசனையுடன் அமர்ந்திருப்பது போல காட்டப்பட்டது. அடுத்தாக பார்க்க பார்க்க தான் புரியும், போக போக தான் தெரியும் என்ற டயலாக்குடன் விஜய் சேதுபதி நடித்த வீடியோ ஒன்றும் வெளியானது.

- Advertisement -

இந்நிலையில் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்று பார்வையாளர்கள் ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர். அதன்படி லேட்டஸ்ட் தகவலாக வருகிற அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. அன்று போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டுக்குள் விஜய் சேதுபதி அனுப்பும் துவக்க விழா நிகழ்ச்சியுடன் பிக்பாஸ் துவங்குகிறது.

அதற்கு முன்பாக அக்டோபர் 3ம் தேதி பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, வீட்டுக்குள் இருக்கும் வசதிகள் விதிமுறைகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்க இருக்கிறார். தொடர்ந்து 4ம் தேதி பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி அவர் அனுப்பி வைக்கும் ஷூட்டிங் நடக்கிறது. அதுவே வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் நாள் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்