- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தில் அப்படி ஒரு காட்சியில் நடிக்க மறுத்த நடிகர் ரஜினிகாந்த்… அதற்கு ஜெயிலர் 2...

கூலி படத்தில் அப்படி ஒரு காட்சியில் நடிக்க மறுத்த நடிகர் ரஜினிகாந்த்… அதற்கு ஜெயிலர் 2 படம்தான் காரணமா? கடைசியில் என்ன நடந்தது?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற 14ம் தேதி கூலி படம் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஆர்வமும் காணப்படுகிறது. இதுவரை நடந்த ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் மட்டுமே ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர ரூ. 500 முதல் ரூ. 2000 வரை டிக்கெட் விலை உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இப்போது 74 வயதான நிலையிலும் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிப்பதும் அதுவும் பான் இந்தியா படமாக கூலி படம் ரிலீஸாவதும் மற்ற மொழி ஹீரோக்கள் மத்தியில் ஆச்சரியத்தை தந்துள்ளது. சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் ரஜினிக்கு இந்தளவுக்கு ரசிகர்கள் தரும் ஆதரவும் வரவேற்பும் அவர்களை திகைக்க வைக்கிறது.

அதுவும் இந்த முறை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் காம்போவில் கூலி படம் வருவதால், எப்படியும் 1000 கோடி ரூபாய்க்கு கூலி வசூலை கடந்து விடும். தமிழில் ரூ. 1000 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமை கூலி படத்துக்கு கிடைத்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை தமிழில் வெளியான எந்த ஒரு படமும் ரூ. 1000 கோடி வசூலை எட்டியது இல்லை.

இந்நிலையில் கூலி படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் தாடியின்றி நடிக்க வேண்டும். அதனால் மீசை மட்டுமே வைத்துக்கொண்டு தாடியின்றி காட்சியில் வர வேண்டும். இதுகுறித்து படக்குழு ரஜினியிடம் கூறிய போது, ஜெயிலர் 2 படத்திலும் தாடியுடன் உள்ள கெட்டப்பில் தான் இப்போது நடித்து வருகிறேன்.

கூலி படத்துக்காக தாடியை எடுத்து விட்டால், ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடிக்க முடியாது. அதனால் தாடியை எடுத்தால் மீண்டும் வளர 10 15 நாட்கள் ஆகிவிடும். ஜெயிலர் 2 படப்பிடிப்பு எனக்கு தொடர்ந்து இருக்கிறது என்று கூறி மறுத்துவிட்டார். அதன்பிறகு கூலி படத்தில் சிஜி தொழில்நுட்பம் மூலம் ரஜினி தாடியுடன் நடித்த காட்சியை, தாடி இல்லாதது போல மாற்றியிருக்கின்றனர்.

ஆனால் அந்த காட்சியை போட்டு பார்த்த போது, லேசாக தாடி இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியதால், சிஜி தொழில்நுட்பம் மூலம் மீண்டும் அந்த காட்சியில் லேசான தாடியுடன் ரஜினி இருப்பது போல் மாற்றியுள்ளனர். இப்போது கூலி படத்தில் ரஜினி அந்த காட்சியில் தாடியுடன் வருவாரா, தாடியின்றி வருவாரா என்பது ரஜினிக்கே தெரியாது என்பதுதான் ஹைலைட்.

சற்று முன்