- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாளம் மற்றும் இந்தியில் உருவாகும் திரிஷியம் 3 படம்… லேட்டஸ்ட் அப்டேட் - ரிலீஸ் தேதி...

மலையாளம் மற்றும் இந்தியில் உருவாகும் திரிஷியம் 3 படம்… லேட்டஸ்ட் அப்டேட் – ரிலீஸ் தேதி குறித்து வெளியான ஆச்சரிய தகவல்!

- Advertisement -

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். மலையாள சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். சமீபத்தில் மோகன்லால் ஷோபனா நடிப்பில் வெளியான தொடரும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் டாக்ஸி டிரைவராக மோகன்லால் நடித்திருந்தார். ஓடிடி தளத்திலும் தொடரும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் திரிஷியம். இந்த படத்தில் நாயகியாக மீனா நடித்திருந்தார். திரிஷியம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழில் திரிஷியம் படம் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இந்த தமிழ் ரீ மேக்கில் கமல் கெளதமி நடித்திருந்தனர். படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

மலையாளத்தில் திரிஷியம் படம் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து கடந்த 2021ம் ஆண்டில் திரிஷியம் படத்தின் 2ம் பாகம் உருவாகி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. திரிஷியம் முதல் பாகத்துக்கு கிடைத்த அதே வரவேற்பும் வெற்றியும் ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. இதையடுத்து திரிஷியம் 3ம் பாகம் உருவாகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் திரிஷியம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் அதை உறுதிப்படுத்தினார்.

அதே நேரத்தில் திரிஷியம் படத்தின் முதல் மற்றும் 2வது பாகங்கள் தெலுங்கு கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரிஷியம் படத்தில் 3ம் பாகம் உருவாவதில் இந்தி படக் குழுவினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அஜய் தேவகன் ஸ்ரேயா நடிப்பில் திரிஷியம் படத்தின் முதல் பாகத்தை இயக்குனர் நிஷிகாந்த் காமத் இயக்கினார். அவர் மறைந்த நிலையில், திரிஷியம் 2ம் பாகத்தை அபிஷேக் பதன் இயக்கியிருந்தார்.

- Advertisement -

இப்போது இந்தி திரிஷியம் 3ம் பாகத்தையும் அபிஷேக் பதன்தான் இயக்க உள்ளார். இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் திரிஷியம் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது என்று வீடியோ மூலமாக நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார். அதேபோல் அஜய் தேவகன் படக்குழுவினரும் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று திரிஷியம் 3 இந்தி படப்பிடிப்பு துவங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.

அதேபோல் வருகிற 2026ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று திரிஷியம் 3 படம் ரிலீஸ் ஆகும் என்றும் இந்தி படக் குழுவினர் அறிவித்துள்ளனர். அதனால் மோகனால் நடிக்கும் திரிஷியம் 3 படமும் இதே தேதியில்தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மலையாளம் இந்தி என 2 மொழிகளிலும் ஒரே நாளில் படப்பிடிப்பு துவங்கி, ஒரே நாளில் படம் ரிலீஸ் ஆகிறது என்ற அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்