- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடித்த தி கோட் படத்தில் இவ்வளவு பெரிய மைனஸ் இருக்குதா? இதை எப்படி டைரக்டர்...

விஜய் நடித்த தி கோட் படத்தில் இவ்வளவு பெரிய மைனஸ் இருக்குதா? இதை எப்படி டைரக்டர் கவனிக்காமல் விட்டாரு – அந்த சினிமா பிரபலம் கரெக்டரா சொல்லியிருக்காரே?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவர உள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் அப்பா, மகன் ரோல்களில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் மறைந்த நடிகர்கள் விஜயகாந்த், விவேக் ஆகியோர் சில காட்சிகளில் ஏஐ தொழில்நுட்பத்தில் நடித்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் கிளைமாக்ஸில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஜயுடன் திரிஷா ஒரு குத்தாட்ட பாட்டுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.

- Advertisement -

தி கோட் படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியான நிலையில் எந்த பாடலுமே பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. ஆனால் பின்னணி இசை சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டாலும், படம் வந்த பிறகுதான் அதை உறுதியாக சொல்ல முடியும். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் போன்றவர்கள் நடித்திருப்பது படத்துக்கு பக்கபலமாக இருக்கிறது.

ஆனால் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் மைக் மோகன் நடித்திருக்கிறார். இவர் கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர். இவர் நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. அவர் நடித்த படங்களில் அவர் சொந்த குரலில் பேசியதில்லை.

- Advertisement -

நடிகர் மோகனுக்கு பின்னணி குரல் பேசியவர் பின்னணி பாடகர் எஸ்என் சுரேந்தர். இவர்தான் பெரும்பாலான படங்களில் நடிகர் மோகனுக்கு குரலாக ஒலித்தவர். ஏனெனில் மோகனின் குரல் கீச் கீச் என இருக்கும். ஒரு நாயகனுக்குரிய கம்பீரம் அவரது குரலில் இருக்காது. அதனால் மோகனின் கம்பீர வெற்றிக்கு எஸ்என் சுரேந்தரின் குரலும் முக்கிய காரணமாக இருந்தது.

அதே நேரத்தில் 1980களில் லவ்வர் பாயாக ரசிக்கப்பட்ட மோகனை, வில்லன் கேரக்டரில் ரசிகர்கள் ஏற்பார்களாக என்பதும் கேள்விக்குறிதான். இதுகுறித்து நடிகர் மீசை ராஜேந்திரன் கூறுகையில், மைக் மோகன் குரலில் கம்பீரம் இருக்காது. சொந்தக்குரலில் அவர் தி கோட் படத்தில் பேசியிருக்கிறார். அதனால் வில்லன் கேரக்டரில், கீச் குரலில் மைக் மோகன் தி கோட் படத்தில் நடித்திருப்பது மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார் மீசை ராஜேந்திரன்.

- Advertisement -

சற்று முன்