- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் - அப்போ ரசிகர்களை சந்தித்தவர் அவர்தானா?...

ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் – அப்போ ரசிகர்களை சந்தித்தவர் அவர்தானா? – குழப்பத்தில் தவிக்கும் மலையாள ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வேட்டையன். கடந்தாண்டில் இந்த படம் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது. ரூ. 265 கோடி வரை உலகம் முழுவதும் வசூலித்தது. தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பும் சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்தது.

கூலி படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது. பான் இந்தியா படமாக உருவான இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா இந்தி நடிகர் அமீர்கான் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மற்றும் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் நித்யாராம் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் மோகன்லால் சிவராஜ்குமார் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

சென்னையில் முதல் ஷெட்யூல் முடிவடைந்த நிலையில் இப்போது கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி என்ற பகுதியில் 2 வாரங்களாக ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இங்கு படப்பிடிப்புக்கு செல்லும் வழியிலும் திரும்பி வரும் வழியிலும் காத்திருக்கும் ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஜெயிலர் 2 படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அட்டப்பாடியில் நடந்து வரும் படப்பிடிப்பில் முக்கிய சண்டை காட்சிகள் படமாக்கப்படுவதால் அங்கு ரஜினிகாந்த் போன்ற 2 டூப் நடிகர்களும் இருந்து வருகின்றனர். ரிஸ்க் ஆன காட்சிகளில் ரஜினிக்கு பதில் அவர்கள்தான் நடிக்கின்றனர். ஏனெனில் 74 வயதான நிலையில் ரிஸ்க் ஆன சண்டை காட்சிகளில் நடிக்க இயக்குனர் நெல்சன் அவரை அனுமதிப்பதில்லை.

இதற்கிடையே ஜெயிலர் படப்பிடிப்பில் டூப்பாக நடிகர் ரஜினிகாந்த் போல இருக்கும் அந்த டூப் நடிகர்கள்தான், ரசிகர்களை சந்தித்து கையசைத்து வருகின்றனர். உண்மையில் அது ரஜினி இல்லை என்றும் சிலர் இணையத்தில் தகவல் பரப்பி வருகின்றனர். இதனால் ரஜினியை பார்த்த சந்தோஷத்தில் இருந்த மலையாள ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் டூப் நடிகர்கள் உள்ளனர். காரில் வரும்போது ரசிகர்களை பார்த்து கையசைப்பது ஒரிஜினல் ரஜினிதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்