- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே படம் ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான முக்கிய தகவல்...

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே படம் ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான முக்கிய தகவல் – அப்போ அந்த படம் தள்ளிப் போகிறதா?

- Advertisement -

கோமாளி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அடுத்து அவரே நாயகனாக நடித்து இயக்கிய படம் லவ்டுடே. இந்த 2 படங்களுமே அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. குறிப்பாக கல்லூரி பள்ளி மாணவ மாணவியர் மற்றும் இளம் வயதினர் மத்தியில் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து ஓ மை கடவுளே இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்தார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த படமும் பிளாக்பஸ்டர் மூவியாக பெரிய வெற்றியை பெற்றது. அடுத்தாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டியூட் என்ற படமும் எல்ஐகே என்ற படமும் தயாராகி ரிலீஸ் செய்வது எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.

- Advertisement -

இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான எல்ஐகே படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகும் என்றும் மற்றொரு படம் டியூட் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் டியூட் மற்றும் துருவ் விக்ரம் நடித்த பைசன் ஆகிய 2 படங்களின் உரிமம் டிஜிட்டல் ரைட்ஸை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியிருப்பதால் தீபாவளிக்கு பைசன் படம்தான் வெளியாக வாய்ப்புள்ளது.

ஏனெனில் ஒரே நாளில் டியூட் பைசன் படங்களை வெளியிட்டால் பிறகு ஓடிடி தளங்களில் ஒரே நாளில் வெளியிட முடியாது. அதனால் டியூட் படம் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளது. அதனால் தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே படம் ரிலீஸ் ஆகும் சூழல் இப்போது உருவாகி உள்ளது. இந்த படம் தீபாவளிக்கு வருவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

- Advertisement -

மேலும் அமேசான் பிரைம், சோனி ஓடிடி தளங்களில் எல்ஐகே படத்தின் டிஜிட்டல் உரிமத்தை வாங்க முயற்சிகள் நடந்து வருகிறது. தீபாவளிக்கு வேறு படம் எதுவும் அமேசான் பிரைம் ஓடிடி தளம் உரிமம் வாங்கவில்லை என்பதால் நிச்சயமாக அது எல்ஐகே படத்தை வாங்கி விட வாய்ப்புள்ளது. அதனால் வரும் தீபாவளியன்று எல்ஐகே படம் ரிலீஸ் செய்வது ஏறக்குறைய உறுதிதான்.

இதற்கிடையே எல்ஐகே படத்தில் ஒரு பாடல் காட்சி மற்றும் சில பேட்ச் ஒர்க் காட்சிகள் மீதம் உள்ளதால் அதை மிக விரைவாக எடுத்து முடித்துவிட்டு போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளில் ஈடுபட இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாராகி விட்டார். அமேசான் பிரைம் ஓடிடி தளம் எல்ஐகே படத்தின் உரிமம் விலையை பேசி முடிவு செய்துவிட்டால் வரும் தீபாவளிக்கு எல்ஐகே படம் திரைக்கு வருவது உறுதி. அதன்பிறகு டியூட் படம் தள்ளிப்போய் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம்.

- Advertisement -

சற்று முன்