- Advertisement -
Homeபொழுதுபோக்குகேமியோ ரோலில் கமல், வில்லனாக இயக்குனர் ஷங்கர், கதாநாயகியாக சிம்ரன் - தரமான சம்பவங்களை தயார்...

கேமியோ ரோலில் கமல், வில்லனாக இயக்குனர் ஷங்கர், கதாநாயகியாக சிம்ரன் – தரமான சம்பவங்களை தயார் செய்த சிபி, முட்டுக்கட்டை போட்ட ரஜினி!

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி டைரக்ட் செய்ய கமிட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தலைவர் 173 படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியா, டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஏனெனில் சிபி சக்ரவர்த்தி கூறிய கதையில் ரஜினிக்கு திருப்தி இல்லாமல் பல மாற்றங்களை திருத்தங்களை அவர் சொன்னதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதே நேரத்தில் அஸ்வத் மாரிமுத்துவிடம் தலைவர் 173 படத்தை டைரக்ட் செய்யுமாறு ரஜினிகாந்த் நேரில் அழைத்து பேசியதாகவும் தெரிகிறது. அதே நேரத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அமைத்து தரப்பட்ட ஆபீஸில் சிபி சக்ரவர்த்தி, தலைவர் 173 படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறார்.

இப்படிப்பட்ட ஒரு குழப்பமான ஒரு சூழலில் இந்த படம் குறித்த சில முக்கிய அப்டேட்டுகள் கிடைத்துள்ளன. அதாவது சிபி இயக்கும் தலைவர் 173 படத்தில் கமல்ஹாசன் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் வருகிறார். இதுகுறித்து கமலிடம் பேசி சிபி சக்ரவர்த்தி ஓகேவும் வாங்கி விட்டார். ரஜினி படத்தில் கமல் நடித்தால் அதுவே வேற லெவலாக இருக்கும்.

- Advertisement -

அத்துடன் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இயக்குனர் ஷங்கர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சிபி சொன்னதை கமல் ஏற்றுக்கொண்ட நிலையில், ஷங்கரிடமும் இதுகுறித்து பேசப்பட்டு அவரும் ஓகே சொல்லி விட்டார். மேலும் இந்த படத்தில் மலையாள நடிகை ஷோபனா சாய்பல்லவி போன்றவர்களிடம் பேசிய நிலையில் சிம்ரன் இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். பேட்ட படத்துக்கு பின் ரஜினியுடன் மீண்டும் சிம்ரன் இணைகிறார்.

இப்படி தலைவர் 173 படத்தில் கமல் ஷங்கர் சிம்ரன் என தரமான சம்பவங்களை செய்ய இயக்குனர் சிபி சக்ரவர்த்தி திட்டமிட்டுள்ள நிலையில் படத்தை சிபி இயக்குவரா, அல்லது அஸ்வத் மாரிமுத்து இயக்குவாரா என்பதில் பலத்த குழப்பமே நீடிக்கிறது. ஏனெனில் இதில் இறுதி முடிவு எடுக்கப் போவது ரஜினிதான். ஒருவேளை அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கினால் சிபி திட்டமிட்டுள்ள இந்த விஷயங்கள் எதுவுமே நடக்காது என்பது உண்மை.

- Advertisement -

சற்று முன்