நடிகர் பிரசாந்த் இப்போது தனது 2வது இன்னிங்சை துவங்கி விட்டார் என்று தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் நேற்று வெளியான அந்தகன் படம், பிரசாந்துக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்திருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதே போல் அந்தகன் படம் குறித்து சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்து வருகிறது. அதனால் அந்தகன் படம் நேற்று ரிலீஸான நிலையில், இரண்டாம் நாளான இன்று பல பகுதிகளில் அந்தகன் படம் திரையிடும் காட்சிகளும், திரை அரங்குகளும் கூடுதலாக்கப்பட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் அந்தகன் படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக் ஆக எடுக்கப்பட்டு இருந்தாலும், அந்த படத்தில் ரசிகர்களுக்கு பிடிக்காத பல காட்சிகளை தமிழ் படத்தில் நீக்கி விட்டு, டைரக்டர் தியாகராஜன் படத்தை இயக்கி இருப்பதால், படம் வேற லெவலில் உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். வழக்கமான வன்முறை படங்களாக தமிழில் வரும் நிலையில், இந்த படம் அதில் இருந்து மாறுபட்டு நிற்பதே பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
நடிகர் பிரசாந்த், இப்போது 51 வயதான நிலையிலும், பழைய அழகான தோற்றத்தில் கம்பீரமாக காணப்படுகிறார், அதிலும் தி கோட் படத்தில் அவர் விசில் போடு பாடலுக்கு விஜயுடன் போட்ட சுறுசுறுப்பான நடனம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதுமட்டுமின்றி தி கோட் படத்தில் விஜயை விட பிரசாந்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் அடிபடுகிறது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பிரசாந்த், என்னுடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தால் அதில் பிரசாந்த் கேரக்டரில் நானேதான் நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும் தனது பயோபிக் படத்தை இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் அல்லது நெல்சன் திலீப்குமார் இருவரில் ஒருவர் இயக்கினால்தான் சிறப்பாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தகன் படம் பிரசாந்துக்கு 50வது படம். விஜய் சேதுபதிக்கு மகாராஜா, தனுஷூக்கு ராயன் போல, அந்த வரிசையில் அந்தகன் பெரிய வெற்றியை தந்துவிட்டது. அந்தகன், தி கோட் படங்களை தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களை லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் இயக்க வேண்டும் என்ற திட்டத்தில் பிரசாந்த் இருக்கிறார். மேலும் கூலி படத்தில் கேமியோ ரோலில் பிரசாந்த் நடிப்பாரா என்ற ஒரு எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.





