- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விஷயத்தில் அவர் மாதிரி நான் இல்லே… ஆனா எனக்கும் அது சங்கடம்தான் - இசைஞானியை...

இந்த விஷயத்தில் அவர் மாதிரி நான் இல்லே… ஆனா எனக்கும் அது சங்கடம்தான் – இசைஞானியை மறைமுகமாக சுட்டிக்காட்டி ஆதங்கத்தை வெளிப்படுத்திய கவிஞர் வைரமுத்து!

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக 20 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவில் புதிய படங்களில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலும் இளையராஜா பாடல்களாக தான் அவை இருக்கின்றன. இதனால் தன் அனுமதியின்றி அவ்வாறு தனது பாடல்களை பயன்படுத்திய அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி நஷ்ட ஈடு கேட்பது இளையராஜாவின் வழக்கமாக உள்ளது.

ஆனால் தேவா போன்ற இசையமைப்பாளர்கள், இத்தனை ஆண்டுகள் கழித்தும் என் இசையில் உருவான பாடல்கள் இன்றைய இளம் ரசிகர்களை சென்று சேருகிறது என்றால் அதை விட பெரிய பாக்கியம் எனக்கு எதுவும் இல்லை. பணத்துக்காக அந்த விஷயத்துக்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதற்கிடையே தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் ஒரு பதிவை செய்திருக்கிறார். வைரமுத்து அதில் கூறியிருப்பதாவது, என்னுடைய பல்லவிகள் பலவற்றை தமிழ் திரையுலகம் படத் தலைப்புகளாக பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்கு கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை.

ஒன்றா இரண்டா… பொன் மாலைப்பொழுது, கண் சிவந்தால் மண்சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன், பனி விழும் மலர்வனம், வெள்ளை புறா ஒன்று, பூவே பூச்சூடவா, ஈரமான ரோஜாவே, அந்த நிலாவ தான் கையில புடிச்சேன், மௌன ராகம், மின்சார கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப்பார், தென்மேற்கு பருவக்காற்று, விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன் இப்படி இன்னும் பல.

- Advertisement -

சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை. காணும் இடங்களில் கேட்டதும் இல்லை. செல்வம் பொதுவுடமை ஆகாத சமுதாயத்தில் அறிவாவது பொதுவுடமை ஆகிறதே என்று அகமகிழ்வேன். ஏன் என்னை கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது. ஆனால் என்னை ஒரு வார்த்தை கேட்டு விட்டு செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா என்று அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

அதாவது இளையராஜா போன்றவர்கள் ஏற்கனவே தனது இசைக்கு தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கி விட்டு அந்த பாடல்களை இசையமைத்து தருகிறார். பிறகு அந்த பாடல்களை பயன்படுத்தினால் நஷ்ட ஈடு கேட்கிறார். ஆனால் நான் எழுதிய பாடல் வரிகளை படங்களின் தலைப்பாக மாற்றினாலும், ஒரு வார்த்தை நம்மிடம் சொல்லவில்லையே என சங்கடம் இருந்தாலும் அதை அவர்களிடம் கேட்பதில்லை என்று கவிஞர் வைரமுத்து இந்த பதிவில் ஆதங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்