லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் அவரது 171 வது படத்துக்காக எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் அதிகரிக்க துவங்கி விட்டது. தசெ ஞானவேல் இயக்கத்தில் இப்போது உருவாகி வரும் வேட்டையன் படத்தை விட லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகும் படத்துக்கு தான் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணங்கள் மாநகரம், கைதி, விக்ரம் என்ற மூன்று பிளாக் பஸ்டர் மூவிகளை தந்தவர் லோகேஷ் கனகராஜ். விஜய் முதலில் நடித்த மாஸ்டர் படமும், 2வது நடித்த லியோ படமும் ரசிகர்களுக்கு போதிய திருப்தியை தரவில்லை. அதிலும் லியோ படம் இடைவேளைக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்த படம்தானா இது, என்ற குழப்பத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.
விக்ரம், கைதி, லியோ படங்களில் எல்சியு விஷயங்களை லோகேஷ் கனகராஜ் கொண்டு வந்திருந்தார். அதாவது முந்தைய படங்களின் கேரக்டர்களை, அதன் தொடர்ச்சியாக அடுத்த படங்களிலும் கொண்டு வருவதுதான் எல்சியு. ஆனால் அது லியோ படத்தை பொருத்தவரை விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால், அதுவே படத்தின் தோல்விக்கும் முக்கிய காரணமானது.
எனவே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முந்தைய படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் ரஜினி 171 படத்தில் நடித்தாலும் அவர்கள் எல்சியு பாத்திரங்களாக வராமல், புதிய கேரக்டர்களில்தான் வருவர். அவர்களுக்கும் எல்சியுவுக்கும் சிறிதும் சம்பந்தம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
ரஜினி 171 படத்தில் ரஜினி கேரக்டர் 2 விதமாக இருக்கும். இதில் ஒருவர் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளது. அதே போல் நடிகர் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் நடிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. குறிப்பாக ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சில முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினி 171 படத்தில், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் நடிக்கிறார். லியோ படத்தில் சாக்லேட் காபி கேட்டு சைக்கோ கேரக்டரில் அசத்திய சாண்டி மாஸ்டருக்கு மீண்டும் வாய்ப்பு தருகிறார் டைரக்டர். அதே போல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இந்த படத்தில் நடிப்பதும் 99 சதவீதம் உறுதியாகிவிட்டது. வரும் நாட்களில் அடுத்தடுத்த கேரக்டர்கள் குறித்த தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.





