- Advertisement -
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி என அழைக்கப்படும் நடிகர் லெஜன்ட் சரவணன் அடுத்து தனது மூன்றாவது படத்தில் நடிக்க தயாராகி விட்டார். ஏற்கனவே லெஜெண்ட் மற்றும் லீடர் ஆகிய 2 படங்களில் நடித்த அவர் இப்போது மான் கராத்தே பட இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் மூன்றாவது படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் வருகிற டிசம்பரில் துவங்க உள்ளது. இந்த படத்தில் லெஜெண்ட் சரவணன் மூன்று விதமான வித்தியாசமான கெட்டப்புகளில் வந்து ரசிகர்களை மிரட்டப் போவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





