- Advertisement -
Homeபொழுதுபோக்குஆகஸ்ட்ல ஷூட்டிங்னு சொன்னீங்க... ஆனால் மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்த அஜித்.. அப்போ விடாமுயற்சி அவளோ...

ஆகஸ்ட்ல ஷூட்டிங்னு சொன்னீங்க… ஆனால் மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்த அஜித்.. அப்போ விடாமுயற்சி அவளோ தானா?…

- Advertisement -

ஒரே இயக்குனருடன் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வழக்கத்தை அஜித் பின்பற்றி வருகிறார். ஒரு காலத்தில் நடிகர் ரஜினி, இயக்குனர் எஸ் பி முத்துராமனுடன் இதே வழக்கத்தை தொடர்ந்தார். இதேபோல் நடிகர் அஜித்தும், சிறுத்தை சிவா உடன் நான்கு திரைப்படங்களிலும், ஹெச் வினோத்துடன் மூன்று திரைப்படங்களிலும் பணிபுரிந்து இருக்கிறார். நடிகர் விஜய்யும், அட்லியுடன் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஹெச் வினோத்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களில் நடித்தார் அஜித். இதில் மேற்கொண்ட பார்வை நல்ல விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் பெரிய சாதனையை நிகழ்த்தவில்லை. வலிமை திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக அவருடன் துணிவு படத்தில் நடித்தார் அஜித். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் யாருடன் இணைய போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக, விக்னேஷ் சிவன் களத்திற்கு வந்தார். லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை எடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அஜித்துடன் விக்னேஷ் சிவன் சேர்ந்திருப்பதால் எந்த மாதிரியான கதையாக இருக்கும் என பலரும் யூகித்து வந்த நிலையில், திடீரென இந்த கூட்டணி பிரிந்தது. தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பால் விக்னேஷ் சிவன் விலகியதாக தெரிகிறது.

இதையடுத்து அஜித்தை இயக்கப் போவது யார் என பலரும் எதிர்பார்க்க, மகிழ்திருமேனியின் பெயர் அடிபட்டது. இதை அஜித் பிறந்தநாளன்று உறுதிப்படுத்திய லைகா தயாரிப்பு நிறுவனம், படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைத்திருப்பதாக அறிவித்தது. க்ரைம் திரில்லர் படங்களில் கைதேர்ந்த இயக்குனரான மகிழ் திருமேனி அஜித்துடன் இணைந்து இருப்பதால் ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும், வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம், வலிமை படங்களைத் தொடர்ந்து மீண்டும் வி சென்டிமென்ட்டில் விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதே என்று குமுறினர்.

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க, மே ஒன்றோடு சரி, அதன் பிறகு எந்த அப்டேட்டும் படத்திலிருந்து வெளியாகாததால் ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர். முதலில் திரிஷா படத்தில் நடிப்பதாகவும், பிறகு அவருக்கு பதில் தமன்னா சேர்ந்திருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்தது. வில்லனாக அருண் விஜய் இருப்பதாகவும் சிலர் பேசிக் கொண்டனர். ஆனால் இது குறித்து பட குழுவிடமிருந்து எந்த ஒரு அதிகார அறிவிப்பும் வெளியாகவில்லை. நடிகர் அஜித், விடாமுயற்சியில் கவனம் செலுத்தாமல் பைக் டூரிலேயே இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ஒரு வழியாக ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு இருக்கும் என்றும், ஹைதராபாத்தில் சூட்டிங் தொடங்குவதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர். இதனால் சற்று நிம்மதி அடைந்த அஜித் ரசிகர்கள், விடாமுயற்சியின் அவுட்புட்டை காண தயாராகி வந்தனர். ஆனால் அத்தனை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மீண்டும் பைக் டூரை தொடங்கி இருக்கிறார் ஏகே. இந்த முறை, ஜெர்மனி, டென்மார்க், நார்வே நாடுகளில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதனால் விரகதி அடைந்துள்ள அஜித் ரசிகர்கள், சீக்கிரம் ஷூட்டிங்ற்கு வாங்க ஏ கே என்று இணையத்தில் அழைப்பு விடுக்கின்றனர். அதேசமயம், அஜித்தின் இந்த பைக் டூரை பலரும் சிலாகித்து வரவேற்று வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்