- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த ரகசிய வார்த்தைகளை கவனிச்சீங்களா? HD குவாலிட்டி ஃபர்ஸ்ட்...

லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த ரகசிய வார்த்தைகளை கவனிச்சீங்களா? HD குவாலிட்டி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

- Advertisement -

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் இரண்டாவது படமாக லியோ இருக்கிறது. லோகேஷ் கனகராஜின் இதற்கு முந்தைய படமான விக்ரம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து லியோவும் அதைவிட அதிகமான ஒரு உச்சத்தை தொடும் என்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் லியோ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

Leo first look poster

லியோ படத்தில் கௌதம் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், த்ரிஷா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் விஜய்யோடு சேர்ந்து நடிக்கின்றனர். ஆரம்பத்தில் காஷ்மீரில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பு அடுத்தடுத்ததாக பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. படத்திற்கான பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. விஜய்காண காட்சிகள் இன்னும் சில நாட்களில் நிறைவடையும் என்று லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த படத்தை பொருத்தவரை அனிருத் இசையமைப்பாளராக உள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இவரின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆன நிலையில், லியோ படத்திலும் பாடல்கள் உச்சம் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ஐ முன்னிட்டு முதல் சிங்கிள் வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. அதன் காரணமாக இன்று முதல் சிங்கிள் வெளியாக உள்ளது.

அதோடு தற்போது வெளியாகி உள்ள முதல் பார்வையில் விஜய் ரத்தம் சொட்ட சொட்ட ஒரு கழுதைப்புலியின் மேல் அமர்ந்து கொண்டு கையில் சுத்தியலுடன் காட்சியளிக்கிறார். அவருக்கு பின்புறத்தில் காஷ்மீர் மலை பிரதேசங்கள் இருக்கின்றன. அந்த போஸ்டரில் சில வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.

Leo first look poster

In the WORLD Of Untamed Rivers, Calm Water Either Become Divine GOD or Dreaded DEMONS என்பது தான் அந்த வாசகம். இதன் பொருள் யாதெனில், “கட்டுக்கடங்காத நதிகளின் உலகில், அமையான நீரானது தெய்வீக தன்மையோடும் மாறலாம் அல்லது கொடூரமான பேய்களாகவும் மாறலாம்” என்பது தான்.

சற்று முன்