நடிகர் அஜீத்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் குட் பேட் அக்லி படம் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் விருப்பத்தை மட்டுமே மையமாக கொண்டு காட்சிக்கு காட்சி அஜீத்குமாரை புகழும் ஒரு படமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அவரே ஏகேவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.
இந்த படத்தின் கதை என்னவென்றால், தன் மகனுக்காக தனது கேங்க்டர் வாழ்க்கையை விட்டு விலகும் கதாநாயகன், சிறைக்கு சென்று செய்த குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து திரும்புகிறான். மீண்டும் அவர் நல்லவனாக மாறிய நிலையில், தன் மகனுக்கு ஏற்படும் பல பிரச்னைகளால் மீண்டும் டான் ஆக மாறி, வில்லன்களை பழிவாங்குவதே இந்த படத்தின் கதை.
கடந்த 2023ம் ஆண்டில் வெளியான படம் லியோ. விஜய் நடித்த இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருந்தார். பார்த்திபன் லியோ என 2 கேரக்டர்களில் விஜய் நடித்திருந்தார். திரிஷா மனைவியாக நடித்திருந்தார். கௌதம் மேனன் மன்சூர் அலிகான் பிரியா ஆனந்த் சஞ்சய் தத் அர்ஜூன் உள்ளிட்ட நடித்த இந்த படம் கேங்ஸ்டர் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் கேங்ஸ்டர் லீடரான லியோ விஜய், ஒரு கட்டத்தில் தனது மனைவி மகன் மகள் என குடும்பத்துக்காக அதை விட்டு விலகி, பார்த்திபன் என்ற கேரக்டரில் காபி ஷாப் ஓனராக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவார். ஒரு கட்டத்தில் தன் மகன் மகள் உயிரை காப்பாற்ற அவர் மீண்டும் கேங்ஸ்டர் அவதாரம் எடுத்து டான் ஆக மாறி வில்லன்களை பழிவாங்குவார்.
ஆக மொத்தம் லியோ படத்தின் மற்றொரு ஜெராக்ஸ் பிரதியாக தான் குட் பேட் அக்லி படமும் உள்ளது. கேங்ஸ்டர் திருந்தி நல்லவனாக மாறி, பிறகு தன் குடும்பத்துக்காக அதே கேங்ஸ்டர் அவதாரம் எடுத்து டான் ஆக மாறி வில்லன்களை பழிவாங்குவதே கதை. இதில் மற்றொரு முக்கிய ஒற்றுமை என்னவென்றால் அதில் விஜய்க்கு மனைவி திரிஷா. இதிலும் அஜீத்குமாருக்கு மனைவி திரிஷா தான்.
அதே போல் லியோ படத்தில் விஜய் மகனின் வயது 17. அதே போல் குட் பேட் அக்லி படத்திலும் அஜீத்குமார் மகனின் வயது 17 தான். எனவே லியோ படத்துக்கும் குட் பேட் அக்லி படத்துக்கும் இப்படி கதை கேரக்டர்களில் உள்ள ஒற்றுமையை பார்த்து, எப்படி ஒரே கதையில் ஒரு படத்தில் விஜய்க்கும், ஒரு படத்தில் அஜீத்குமாருக்கும் திரிஷா ஜோடியாக நடித்தார். அப்படி என்றால் அவருக்குதான் முதலில் இது ரெண்டுமே ஒரே கதை என்ற விவரம் தெரிந்திருக்கும் என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.





