- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படத்தின் ஒரு நாள் வசூலால் பிரமித்துப்போன கோலிவுட் திரையுலகம்... என்னதான் இருந்தாலும் வலிமை கிட்ட...

லியோ படத்தின் ஒரு நாள் வசூலால் பிரமித்துப்போன கோலிவுட் திரையுலகம்… என்னதான் இருந்தாலும் வலிமை கிட்ட நெருங்க முடியலையேப்பா….

- Advertisement -

கடந்த பத்து மாதங்களாக தொடர்ந்து பேசப்பட்டு வந்த லியோ திரைப்படம் ஒரு வழியாக நேற்று வெளியானது. வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களும், வெளிநாடுகளிலும் லியோ வெளியானது.

தனது முந்தைய திரைப்படங்களில் எல்சியு கான்செப்டை லோகேஷ் கனகராஜ் வைத்திருந்ததால், இந்த திரைப்படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அந்த எதிர்பார்ப்பை லியோ பூர்த்தி செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும். லியோ நல்ல விமர்சனத்தையே பெற்றாலும், எல் சி யுவில் வளைந்து நெளிந்து திணிக்கப்பட்டிருப்பதாக சிலர் கருதுகின்றனர்.

- Advertisement -

முதல் பாதியை நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் எடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். எடுத்ததும் கழுதை புலி சண்டை, பிறகு காபி ஷாப்பில் சண்டைக் காட்சி, நீதிமன்றம் விஜய்யை நிரபராதி என்று அனுப்பி பாராட்டுவது, மார்க்கெட்டில் விஜயை ஒரு கும்பல் துரத்துவது பின்னர் அதற்கு அடுத்து வந்த சண்டை காட்சி என முதல் பாதி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

குறிப்பாக சஞ்சய்தத், அர்ஜுன் ஆகியோரின் அறிமுக காட்சியும், அதன் பிறகு இருந்த இடைவெளியும் திரையரங்குகளில் விசில் சத்தம் விண்ணை பிளக்கும் அளவுக்கு நேர்த்தியாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதன் பிறகு தான் லோகேஷ் கனகராஜ் சொதப்பியதாக பலரும் கூறுகின்றனர். லியோ கதாபாத்திரம் வரும் காட்சி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது சரியாக ஒர்க் ஆகவில்லை என்ற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது.

- Advertisement -

இப்படி விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக படத்தை தோளில் வைத்து சுமந்து இருக்கிறார் விஜய். பார்த்திபன் கதாபாத்திரத்தில் வந்திருக்கும் விஜய்யை பார்த்து ரசிக்கவே லியோவை திரையரங்குகளில் காணலாம் என பலரும் கூறுகின்றனர். இந்த நிலையில் லியோ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாடு கேரளா கர்நாடகா என ஒட்டுமொத்தமாக லியோ திரைப்படம் ஒரே நாளில் 115 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதற்கு முன்பாக ரஜினிகாந்தின் கபாலி மற்றும் 2.0 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே ஒரே நாளில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தன. அதேசமயம் தமிழ்நாட்டில் 27 கோடியே 63 லட்சம் ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முதல் நாள் வசூலில் வலிமை திரைப்படம் தான் முதலிடத்தில் இருக்கிறது. அந்த திரைப்படம் ஒரே நாளில் 36 கோடி ரூபாய் வசூலித்தது. இதைப் பார்க்கும்போது அஜித்தின் சாதனையை விஜய் முறியடிக்கவில்லை என்று ஏகே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்