நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு “லியோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “அல்டர் ஈகோ நான் ரெடி” என்ற பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. இப்பாடலுக்காக ரசிகர்கள் பலரும் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது “நான் ரெடி” பாடலின் அட்டகாசமான புரொமோ ஒன்று வெளிவந்துள்ளது. அனிருத் இசையில் பீட்ஸ் எல்லாம் துள்ளலாக இருக்கிறது. “நான் ரெடிதான் வரவா?” என்று தொடங்கும் இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார்.
இந்த பாடலை விஷ்ணு எடவான் என்பவர் எழுதியுள்ளார். தற்போது இந்த பாடலின் புரொமோ வெளியான நிலையில் இந்த புரொமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவர் பாடும் பாடல்களில் “இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்” என்ற வாசகம் திரையில் இடம்பெறும். இந்த நிலையில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் அந்த வாசகத்தை பயன்படுத்தியுள்ளார். இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

“லியோ” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க செவன் ஸ்கிரீன் எஸ் எஸ் லலித்குமார் தயாரித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இத்திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.





