- Advertisement -
Homeபொழுதுபோக்குஅய்யய்யோ அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்.. இணையத்தில் லீக்கான லியோ HD ப்ரிண்ட்.. சோதனை மேல் சோதனை

அய்யய்யோ அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்.. இணையத்தில் லீக்கான லியோ HD ப்ரிண்ட்.. சோதனை மேல் சோதனை

- Advertisement -

விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடிவருகிறார்கள். முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படம் கண்டிப்பாக விஜய்யின் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துவிடும் என்று ஆணித்தரமாக கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

அதேசமயம் படத்தை பார்த்த ஒரு தரப்பினர் இந்தப் படம் கொண்டாடும் அளவுக்கெல்லாம் ஒன்றும் இல்லை. எல்சியூவும் சரியாக கனெக்ட் ஆகவில்லை. பழைய கதையை புது புது லொக்கேஷனில் லோகேஷ் எடுத்திருக்கிறார். கண்டிப்பாக இது வசூல் சாதனை படைத்தாலும் விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கும் என ஓபனாக சொல்கின்றனர்.

- Advertisement -

தமிழ்நாட்டில் ஒரு காட்சி முடிவடைந்திருக்கும் சூழலில் பெரும்பாலும் கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. இது விஜய் ரசிகர்களை கொஞ்சம் அப்செட்டாக்கியுள்ளது. ஆனாலும் படத்திற்கு வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனத்தை கொடுக்கிறார்கள். இது எதிர்பார்த்த ஒன்றுதான்.எப்படி இருந்தாலும் இந்தப் படம் தடைகளை தாண்டி வெல்லத்தான் போகிறது என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

ஒருபக்கம் நெகட்டிவ் விமர்சனங்கள் தலைதூக்க ஆரம்பித்திருக்கும் சூழலில் மறுபக்கம் இன்னொரு தலைவலி படக்குழுவுக்கு ஆரம்பித்திருக்கிறது. அதாவது லியோ படத்தின் ஹெச்டி ப்ரிண்ட் தமிழ் ராக்கர்ஸ், Movierulz, டெலிகிராம், டோரெண்ட் ஆகிய இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவை உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

- Advertisement -

அதேபோல் விஜய் ரசிகர்களும் ஆர்வக்கோளாறில் விஜய்யின் இண்ட்ரோ காட்சி, படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையெல்லாம் கவனித்த படக்குழு இதுபோன்ற நிகழ்வுகளை எப்படி தடுப்பது என்று தெரியாமல் குழம்பிப்போய் நிற்கிறது. முன்னதாக லியோ படம் ரிலீஸாகும் முன்பு இப்படம் சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியாவதை தடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் லலித் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் லியோ படம் சட்டவிரோதமாக வெளியாவதை தடுக்க வேண்டும் என கூறி 1200க்கும் மேற்பட்ட இணையதளங்களுக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதையெல்லாம் மீறி தற்போது படம் லீக்காகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்