- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் களம் போரடித்து விட்டதா? மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை ரோஜா -...

அரசியல் களம் போரடித்து விட்டதா? மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை ரோஜா – என்னென்ன படங்களில் நடிக்கிறார் தெரியுமா?

- Advertisement -

கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் செம்பருத்தி படத்தில் அறிமுகமான ரோஜா முதல் படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல அடையாளமும் கவனமும் பெற்ற ரோஜா தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார்.

குறிப்பாக உழைப்பாளி வீரா சூரியன் இந்து தமிழ் செல்வன் பரம்பரை மக்கள் ஆட்சி ஏழையின் சிரிப்பில் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் வீட்டோட மாப்பிள்ளை என பல வெற்றிப் படங்களில் நடித்தார். கடந்த 1990 முதல் 2000ம் ஆண்டு வரை ரஜினி விஜயகாந்த் சத்யராஜ் பிரபு சரத்குமார் பிரபுதேவா என நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.

- Advertisement -

இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதல் திருமணம் செய்துக்கொண்ட நடிகை ரோஜா தனது சொந்த ஊரான ஆந்திராவில் செட்டிலானார். ஒரு கட்டத்துக்கு பிறகு ஆந்திரா அரசியலில் ஆர்வம் காட்டிய ரோஜா ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்த போது விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரோஜா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பிற மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதுவரை அவர் 125 படங்களுக்கு மேல் நடித்தவர். கடந்த 10 ஆண்டுகளாக அவர் சினிமாவில் நடிக்காமல் அரசியல் சார்ந்த பணிகளில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் அவர் ஆர்வம் காட்ட துவங்கியிருக்கிறார்.

- Advertisement -

குறிப்பாக தமிழ் சினிமாவில் நடிகை ரோஜா ரீ என்ட்ரி தருகிறார். தமிழில் லெனின் பாண்டியன் என்ற படத்தில் நடிகை ரோஜா இப்போது நடித்து வருகிறார். இதையடுத்து தமிழில் ஜமா என்ற படத்தை இயக்கி நடித்த பாரி இளவழகன் என்பவர் இயக்கி நடித்து வரும் ஒரு புதிய படத்திலும் நடிகை ரோஜா முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளார்.

சினிமா நடிப்பை விட்டு விலகி பல ஆண்டுகள் ஆனபோதும் மீண்டும் ரோஜாவின் சிறந்த நடிப்பை பார்த்து படக்குழுவினர் பாராட்டியுள்ளனர். இந்த படத்தை டூரிஸ்ட் பேமிலி குட்நைட் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை ரோஜா இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி தருவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்