- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் தம் அடிப்பது இதனால்தான்- சஸ்பென்ஸை உடைத்த லியோ பட பாடலாசிரியர்

விஜய் தம் அடிப்பது இதனால்தான்- சஸ்பென்ஸை உடைத்த லியோ பட பாடலாசிரியர்

- Advertisement -

“லியோ” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலான “நா ரெடிதான் வரவா” பாடல் கடந்த விஜய் பிறந்தநாள் அன்று சிங்கிள் பாடலாக வெளிவந்தது. இந்த பாடலுக்கு தற்போது அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பாடலை நடிகர் விஜய் தனது சொந்த குரலில் பாடியுள்ளார். அனிருத் இசையில் விஷ்ணு எடவன் இப்பாடலை எழுதியுள்ளார்.

இப்பாடல் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலாக தற்போது அமைந்துள்ளது. “லியோ” திரைப்படம் வெளிவரும் வரை இந்த பாடலே போதும் என்றளவுக்கு பல ரசிகர்கள் உற்சாகமாக இந்த பாடலை ரசித்து கொண்டாடி வருகின்றனர். இப்பாடலில் இடம்பெற்ற வரிகள் பலவும் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதை குறியீடாக உணர்த்தி வருவதாக பல ரசிகர்கள் டீகோட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

அதே போல் இப்பாடலின் அறிவிப்பு போஸ்டர் வெளிவந்தபோதே ஒரு சர்ச்சை எழுந்தது. அதாவது அந்த போஸ்டரில் விஜய் வாயில் புகைப்பிடித்தபடி தென்பட்டார். அப்போதே இதற்கு பல கண்டனங்கள் எழுந்தன. விஜய்க்கு பள்ளி, கல்லூரி மாணவர்களே அதிக ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதால் விஜய் இவ்வாறு புகைப்பிடிப்பது போல் நடிப்பது தவறான முன்னுதாரணமாக ஆகும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பாடலை எழுதிய விஷ்ணு எடவன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “கதைக்கு தேவைப்படுவதால் அவ்வாறு வைத்திருக்கிறார்கள். படத்தில் ஒரு சண்டை காட்சி என்று வந்துவிட்டால் ஹீரோ பலரையும் அடிக்க வேண்டியது இருக்கும், கொலை செய்ய வேண்டியது இருக்கும். நிஜத்தில் ஒரு சிறுவனை அப்படி பண்ண சொல்ல முடியுமா?

- Advertisement -

நான் தம் அடிக்கிறேன், அதனால் நீங்களும் தம் அடியுங்கள் என்று இங்கு யாரும் சொல்லவில்லை. அந்த கதாபாத்திரத்திற்கு அது தேவை. இதில் எந்த ஆபத்தான விஷயத்தையும் நான் பார்க்கவில்லை” என கூறியுள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்