- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ டீசரை குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பத்திரிக்கையாளர், கடைசில இப்படி ஏமாத்திட்டாங்களே

லியோ டீசரை குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பத்திரிக்கையாளர், கடைசில இப்படி ஏமாத்திட்டாங்களே

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய் ஒரு வித்தியாசமான கேங்கஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் போன்ற பலரும் நடித்து வருவதால் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “விக்ரம்” திரைப்படத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார். இதில் லோகேஷ் கனகராஜ் அதற்கு முன்பு இயக்கிய “கைதி” திரைப்படத்தின் ரெஃபரன்ஸ் பயன்படுத்தப்பட்டது. “விக்ரம்” திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் “லியோ” திரைப்படத்தை இயக்கப்போகிறார் என்பது தெரிய வந்த பிறகு “லியோ” திரைப்படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸிற்குள் வருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் வருகிற 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு “லியோ” திரைப்படத்தின் டீசர் வெளிவரும் எனவும் அந்த டீசருக்கு கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுக்கவுள்ளார் எனவும் செய்திகள் இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் சமீபத்தில் தனது வலைப்பேச்சு வீடியோவில் மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி இது குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது விஜய் பிறந்தநாளை முன்னிட்டு “லியோ” டீசர் வெளிவரும் என்ற தகவலும் அந்த டீசருக்கு கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுக்கவுள்ளார் என்ற தகவலும் முழுக்க முழுக்க வதந்தி என்று கூறியுள்ளார். இந்த வதந்தியால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்