தமிழ் சினிமாவில் இன்றைய இளம் ரசிகர்களின் அதிக கவனம் பெற்ற ஒரு நடிகராக வலம் வருபவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தை இயக்கிய அவர் தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அவரே நாயகனாகவும் நடித்தார். இந்த 2 படங்களுமே பெரிய வெற்றிப் படங்களாக பிரதீப் ரங்கநாதனுக்கு தமிழ் சினிமாவில் நல்ல அடையாளத்தை கொடுத்தது.
தொடர்ந்து ஓ மை கடவுளே இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்தது. இந்த படம் மூலம் 3 முறை தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன் பெரிய அளவில் கொண்டாடப்பட்டார். இப்போது டியூட் மற்றும் எல்ஐகே ஆகிய 2 படங்களில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார்.
இதில் டியூட் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே படம் எப்போது ரிலீஸ் என்பது இன்னும் முடிவாகாமல் உள்ளது. இதற்கிடையே செப்டம்பர் 18ம் தேதி ரிலீஸ் என கூறப்பட்ட நிலையில், அது உறுதி செய்யப்படாத தகவலாக உள்ளது.
ஆனால் கூலி படத்தின் ஆடியோ லாஞ்ச் விழாவுக்கு பிறகு எல்ஐகே படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கிறோம் என்று எல்ஐகே படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூலி படம் இசை வெளியீட்டு விழாவுக்கும் எல்ஐகே படம் ரிலீஸ் தேதிக்கும் என் சம்பந்தம் என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். ஒருவேளை ரஜினி ரசிகராக தன்னை விக்னேஷ் சிவன் காட்டிக்கொள்ள இப்படி சொல்கிறாரா என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.
எல்ஐகே படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் இன்னும் சில தினங்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளது. இந்த படத்தை தீபாவளிக்கே கூட ரிலீஸ் செய்யலாம். அதற்கான கால அவகாசமும் நிறைய உள்ளது. ஆனால் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படமும் தீபாவளிக்கு வர உள்ளதால், 2 படங்களுமே ஒரே நாயகன் நடித்த படம் என்பதால் ஒரே நாளில் ரிலீஸாக வாய்ப்பில்லை.
அதே நேரத்தில் எல்ஐகே படம் ரிலீஸ் தேதியை இன்னும் அறிவிக்காமல் தாமதிக்க முக்கிய காரணம், அந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் ஓடிடி உரிமம் பெற எந்த நிறுவனமும் முன்வரவில்லை. கோமாளி லவ் டுடே டிராகன் என 3 வெற்றிப் படங்களை தந்த பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த படமாக இருந்தும் அதிக பட்ஜெட்டில் உருவான படம் என்பதால், டிஜிட்டல் வியாபாரம் ஜவ்வாக இழுக்கிறது. அதன் காரணமாகவே எல்ஐகே படம் ரிலீஸ் தேதி அறிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.





