- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் 69 படத்தில் நடிக்கப் போகும் நட்சத்திர பட்டாளங்கள், போடு வெடிய, தரமான சம்பவத்துக்கு தயாரான...

விஜய் 69 படத்தில் நடிக்கப் போகும் நட்சத்திர பட்டாளங்கள், போடு வெடிய, தரமான சம்பவத்துக்கு தயாரான எச் வினோத் – லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் அபார வெற்றியால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனமும் 1000 கோடி ரூபாய் இலக்கை தி கோட் எட்டிவிடும் என்ற மகிழ்ச்சியில் உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு தொடர்பான பணிகளில் தீவிரம் காட்டி விடுகிறார். வருகிற 23ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான முறையில் நடத்தப்படுகிறது. இதில் 50,000 பேர் வரை பங்கேற்க போலீஸ் அனுமதி தந்துள்ள நிலையில், இலட்சக்கணக்கான மக்கள் அங்கு திரள வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

- Advertisement -

இந்த மாநாட்டை தொடர்ந்து அடுத்த மாதம் அக்டோபரில் விஜயின் அடுத்த படம் அவரது 69 வது படம் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படத்தை டைரக்டர் எச் வினோத் இயக்குகிறார். இது முழுக்க முழுக்க அரசியல் படமாக இல்லாமல், அனைத்து தரப்பு மக்கள் விரும்பும் வகையில் கமர்சியல் படமாகவே இருக்கும் என்று ஏற்கனவே டைரக்டர் எச் வினோத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதனால் இந்த படமும் தி கோட் படம் போல ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும்.

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் 69வது படத்தில் நடிக்கப் போகும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படத்தில் நடிகர் மோகன்லால் மீண்டும் விஜயுடன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஜில்லா படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார். விஜய் 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

- Advertisement -

அதேபோல் பிரேமலு பட நாயகி மமிதா பைஜூ இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதுவும் விஜய்க்கு மகளாக அவர் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் விஜயுடன் பல வெற்றி படங்களில் நடித்த நடிகை சிம்ரன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் உறுதியாகி உள்ளது.

இந்த படத்தில் சத்யன் குரியன் ஒளிப்பதிவாளராக கமிட் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே எச் வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர். அதேபோல் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பணி செய்தவர் என்பதால் டைரக்டர் மற்றும் ஹீரோவுக்கு பிடித்த ஒரு ஒளிப்பதிவாளர் இந்த படத்தில் பணியாற்றுவது இன்னும் இந்த படத்துக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. விஜய் 69 படத்தின் மாஸ் நடிகர், நடிகைகள் நடிப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்