- Advertisement -
Homeபொழுதுபோக்குகெத்தான கேரக்டருக்கு மாறிய நடிகர் மணிகண்டன்… ஹீரோயிசம் காட்டும் கமர்ஷியல் கதைகளுக்கு இவரும் மாறிட்டாரா…?

கெத்தான கேரக்டருக்கு மாறிய நடிகர் மணிகண்டன்… ஹீரோயிசம் காட்டும் கமர்ஷியல் கதைகளுக்கு இவரும் மாறிட்டாரா…?

- Advertisement -

நடிகர் மணிகண்டன் ஜெய்பீம் காலா படங்களில் நடித்த போதுதான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல அறிமுகமும் அடையாளமும் கிடைத்தது. ஆனால் அதற்கு முன்பே காதலும் கடந்து போகும் ஏலே நெற்றிக்கண் விக்ரம் வேதா தம்பி சில்லு கருப்பட்டி பாவ கதைகள் உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் மணிகண்டன் நடித்திருக்கிறார்.

ஆனால் அந்த படங்கள் வெளியான போது மணிகண்டன் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகாததால் அவரை பற்றிய கவனம் ரசிகர்களுக்கு வரவில்லை. ஆனால் இப்போது குட்நைட் படம் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், வளரும் இளம் நடிகராக மணிகண்டன் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறார்.

- Advertisement -

ஜெய்பீம் காலா குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் என மணிகண்டன் இதுவரை நடித்த படங்களில் சாதாரண மனிதர்களில் ஒருவராக தான் அவரது கேரக்டர் இருந்தது. யதார்த்தமான அவரது நடிப்பும் உடல் மொழியும் பேச்சும் பக்கத்து வீட்டு பையனை பார்ப்பது போன்ற ஒரு உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.

அதனால்தான் குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் போன்ற படங்களில் அவரது கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. ஆனால் இப்போது நடிகர் மணிகண்டனும் ஹீரோயிசம் காட்டும் கதைக்கு மாறிவிட்டார். இயக்குனர் பா ரஞ்சித்தின் உதவி இயக்குனர் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிகர் மணிகண்டன் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே மாதவன் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில், போலீஸ் கேரக்டரில் மணிகண்டன் நடித்திருக்கிறார். ஆனால் அப்போது அது ரசிகர்களிடம் பெரிய கவனம் பெறவில்லை. ஆனால் இப்போது ஹீரோவாக மாறியிருக்கும் மணிகண்டன் போலீஸ் அதிகாரி வேடத்தில் முதன்முறையாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

கதைகளின் ஹீரோவாக இதுவரை நடித்த மணிகண்டன், இப்போது ஹீரோயிசம் காட்டும் போலீஸ் கேரக்டரில் நடிப்பது மிகப் பெரிய மாற்றம்தான் என்றாலும், கெத்தான வேடத்தில் நடிப்பதால் மற்ற ஹீரோக்களை போல இவரும் மற்ற ஹீரோக்களை போல கமர்ஷியலுக்கு மாறிடுவாரா, இல்லை நல்ல கலைஞனாக சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிப்பாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்