- Advertisement -
Homeபொழுதுபோக்குLCUவுக்கு விதை இங்கு இருந்துதான் போட்டது... 10 நிமிட வீடியோவை எடுத்து அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த...

LCUவுக்கு விதை இங்கு இருந்துதான் போட்டது… 10 நிமிட வீடியோவை எடுத்து அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த லோகேஷ் கனகராஜ்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

- Advertisement -

குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்ற இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இதுவரை அவர் ஐந்தே ஐந்து திரைப்படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார். மாநகரம் திரைப்படத்தின் மூலம் தொடங்கிய அவரது இயக்குனர் பயணம் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி எனும் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். தங்கக் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த திரைப்படத்தின் சூட்டிங், ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

 

தற்போது சென்னையில் இதற்கான பணிகள் சூடு பிடித்திருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் இந்த அளவு பேமஸ் ஆவதற்கு அவரது இயக்கத்தின் திறமையும் அவர் சொல்லும் கதையின் அம்சமும் தான் காரணம். குறிப்பாக lcu என்னும் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி பட்டித் தொட்டி எங்கும் ரசிகர்களை தன் பக்கம் திருப்பினார் லோகேஷ் கனகராஜ். எல் சி யு என்றால் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்.

 

விக்ரம் திரைப்படத்தில் தான் அவர் இந்த மாயாஜாலத்தை நிகழ்த்தினார். தனது முந்தைய திரைப்படத்தின் கதாபாத்திரங்களை அடுத்த திரைப்படத்திலும் அதே போல் தொடர்வதை இங்கு பல இயக்குனர்கள் செய்திருந்தாலும், அதனை சரியாக புரொஜெக்ட் செய்தது என்னவோ லோகேஷ் கனகராஜ் தான்.

 

இதனால்தான் எல் சி யு, ரசிகர்களிடம் வேகமாக பரவியது. தற்போது இந்த உலகத்திற்குள் உலகநாயகன் கமலஹாசன், தளபதி விஜய், சூர்யா, கார்த்தி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ், நரேன் என ஏராளமானோர் நிறைந்திருக்கிறார்கள். லியோ திரைப்படத்தில் அவர் எல் சி யு வை சேர்த்த விதம் பலருக்கும் திருப்தியை கொடுக்கவில்லை.

 

தற்போது தான் எடுத்து வரும் கூலி திரைப்படம் எல் சி யூ கிடையாது என்பதை ஆரம்பத்திலேயே கூறிவிட்டார் லோகேஷ் கனகராஜ். இப்படியான சூழலில் தான் lcu எங்கு ஆரம்பித்தது என்பதை, பத்து நிமிட வீடியோவாக இயக்கி இருக்கிறார் லோகேஷ். இது தொடர்பான போஸ்டரில், ஒரு ஷாட், இரண்டு கதைகள், 24 மணி நேரம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதனை பகிர்ந்து வரும் ரசிகர்கள், எல் சி யூ வின் ஆரம்பத்தைக் காண தயாராகி வருகின்றனர்.

 

சற்று முன்