- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென டிராப் ஆன லோகேஷ் கனகராஜ் படம்? ராகவா லாரன்ஸ்தான் முக்கிய காரணமா? என்னப்பா சொல்றீங்க!

திடீரென டிராப் ஆன லோகேஷ் கனகராஜ் படம்? ராகவா லாரன்ஸ்தான் முக்கிய காரணமா? என்னப்பா சொல்றீங்க!

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் தனது முதல் திரைப்படமான “மாநகரம்” திரைப்படத்தின் மூலமே மிக பிரபலமாக அறியப்பட்டிருந்தாலும், “கைதி” திரைப்படத்தின் வெற்றி அவரை திரும்பி பார்க்கவைத்தது. அதன் பின் விஜய்யை வைத்து “மாஸ்டர்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படமும் வெற்றியடைந்தது.

அதன் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் அவரை இந்தியா முழுவதும் கொண்டுபோய் சேர்த்தது. கடந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றித்திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமைந்தது. “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றியால் லோகேஷ் கனகராஜ்ஜின் புகழ் உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில் இரட்டை ஸ்டன்ட் மாஸ்டர்களான அன்பறிவ் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோர் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் கூறப்பட்டது. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் தற்போது இத்திரைப்படம் டிராப் ஆகியுள்ளதாக தகவல் வருகிறது. இதற்கு பின்னணியில் உள்ள காரணத்தை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

அதாவது ஏற்கனவே அன்பறிவ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் ராகவா லாரன்ஸ், அன்பறிவ் சகோதரர்களின் பணிகளில் திருப்தி இல்லை என கூறிவிட்டாராம். இதனை தொடர்ந்து இந்த விஷயத்தை ராகவா லாரன்ஸ் சன் பிக்சர்ஸிடம் கூறியிருக்கலாம் என தகவல் வருகிறதாம். மேலும் ஏதோ சில காரணங்களால் அனிருத் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டாராம். இந்த காரணங்களினால் லோகேஷ் கனகராஜும் அனிருத்தும் இணைந்து நடிக்க வேண்டிய படம் டிராப் ஆகியிருக்கலாம் என பிஸ்மி அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

சற்று முன்