- Advertisement -
Homeபொழுதுபோக்கு32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் கை கோர்க்கும் நட்சத்திர நடிகர்... இது லோகேஷ்...

32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் கை கோர்க்கும் நட்சத்திர நடிகர்… இது லோகேஷ் கனகராஜின் அடுத்த பாய்ச்சல்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது மோஸ்ட் வான்டட் இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என ஐந்து திரைப்படங்களை மட்டுமே இயக்கிய அவர், அதில் ஆக்சன் காட்சிகளை தூக்கலாக வைத்து, எல்.சி.யு எனும் கான்செப்டை அறிமுகப்படுத்தியதால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

தொடர்ந்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் எடுப்பதாக இருந்த நிலையில், திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்தார். தலைவரின் 171-வது திரைப்படமாக இது உருவாகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவ் சகோதரர்கள் இதற்கு சண்டை பயிற்சியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதற்கான சூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறதாம். ஏற்கனவே, லியோ படத்தின் அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானபோது, ரிலீஸ் தேதியையும் சேர்த்தே படக்குழுவினர் வெளியிட்டனர். இதனால் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடிய லோகேஷ் கனகராஜ், சொன்னதுபோல அக்டோபர் 19ம் தேதி படத்தை ரிலீஸ் செய்தார்.

ஆனால் இந்த முறை அவர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கவில்லை. கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு படத்திற்கான வேலைகளை பார்க்க அவர் முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே போஸ்ட் புரொடக்சன் பணிகள் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டாருடனான இந்த திரைப்படம் எல்.சி.யு.வுக்குள் வராது என்பதையும் முன்கூட்டியே தெளிவு படுத்திவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

தற்போது படத்திற்கான கதாபாத்திரங்கள் தேர்வில் இயக்குநர் ஆர்வம் காட்டி வருகிறார். இதில் வில்லனாக, சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் இடம் பெற்றிருப்பதாக தகவல் கசிந்தது. மேலும் கதாநாயகியாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது. ஏற்கனவே ஒரு பேட்டியில் பேசியிருந்த லோகேஷ், ரஜினி படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருப்பார்கள் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது அந்த படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி இணைய இருப்பதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்ட நடிகரிடம் லோகேஷ் பேசி விட்டாராம். 1991-ம் ஆண்டு ரஜினி, மம்முட்டி இணைந்து நடித்த தளபதி திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. தேவா – சூர்யா கதாபாத்திரத்தை கொண்டாடாத ஆளே இல்லை என்று கூறலாம். இப்படியான சூழலில் தற்போது மீண்டும் இந்த ஜோடி இணைய இருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்