- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ மட்டுமல்ல, மாஸ்டர் படமும் மலையாள படத்தின் காப்பிதான், லோகேஷ் கனகராஜின் குட்டு அம்பலம்...

லியோ மட்டுமல்ல, மாஸ்டர் படமும் மலையாள படத்தின் காப்பிதான், லோகேஷ் கனகராஜின் குட்டு அம்பலம் – தலைவர் படமும் காப்பிதானே டைரக்டரே?

- Advertisement -

இப்போதெல்லாம் சொந்த கதையை கற்பனையாக உருவாக்கி, அதை திரைக்கதையாக மாற்றி எழுதி, அதற்கேற்ப கேரக்டர்களில் நடிகர், நடிகைகளை நடிக்க வைக்க எல்லாம், இயக்குநர்களுக்கு பொறுமையில்லை. அதைவிட முக்கியம், மண்டையில் சரக்கும் இல்லை. அதற்கு எளிய வழி என்னவென்றால் ஏற்கனவே வந்த படங்களின் கதையை சுடுவதுதான்.

அந்த வகையில், வயலன்ஸ் ஆப் ஹிஸ்டரி படத்தின் கதையை அப்பட்டமாக காப்பி எடுத்து, லோகேஷ் கனகராஜ் எடுத்த படம்தான் லியோ. அதையும் முழுதாக எடுக்காமல், பாதி படத்துக்கு பிறகு சொந்தமாக அபத்தமாக கதை எழுதி, நரபலி என்கிற விஷயத்தை கொண்டு வந்து ரசிகர்களால் கழுவி கழுவி ஊற்றப்பட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

- Advertisement -

லியோ படத்துக்கு முன், இதே லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம்தான் மாஸ்டர். இந்த படத்திலும் போதைப் பொருள் சமாச்சாரம்தான் முக்கிய கருவாக இருந்தது. ஆனால் இந்த படத்தையும் லோகேஜ் கனகராஜ், மற்றொரு படத்தில் இருந்து காட்சிக்கு காட்சி ஈயடிச்சான் காப்பியடித்து எடுத்திருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துளளது.

கடந்த 1989ம் ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த படம் முத்ரா. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்வந்த இந்த படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருக்கிறார். இது, சிறார் சீர்த்திருத்த பள்ளியில் உள்ள டீன் ஏஜ் வயது குற்றவாளிகளை பற்றிய கதைதான்.

- Advertisement -

இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியையும், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியையும் ஒரே வீடியோவாக பதிவிட்டு, காட்சி மட்டுமின்றி வசனங்கள் கூட ஒன்றாக இருப்பதை சுட்டிக்காட்டி, முத்ரா படத்தை காப்பியடித்துதான் மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எடுத்திருக்கிறார் என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.

வீடியோ பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்https://x.com/Arp_2255/status/1759239895271227856?s=20

இந்த நிலையில், ஒன்றரை மாதங்களாக ரூம் போட்டு ரஜினி 171 படத்தின் கதையை எழுதி வருவதாக லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கூறியுள்ளார். கடந்த ஒன்றரை மாதங்களாக வெளியே வரவில்லை. போனே பார்க்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். எப்படியும் ரஜினி படத்தையும் காப்பி அடித்துதான் எடுக்கப் போகிறார். ஆனால் அது தெலுங்கா, மலையாளமா, கன்னடமா, அல்லது தமிழிலேயே பல ஆண்டுகளுக்கு முன் வந்த படமா, அல்லது ஹாலிவுட், பாலிவுட் படங்களில் ஒன்றாக நிச்சயமாக இருக்கும் என்று ரசிகர்கள், தலைவர் படமும் காப்பிதானா, என கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்