- Advertisement -
Homeபொழுதுபோக்குஅருண் மாதேஸ்வரன் கதைக்கு நாயகனாகும் லோகேஷ் கனகராஜ்... படத்திற்காக லோகேஷிடம் இப்படி ஒரு விஷயத்தை செய்ய...

அருண் மாதேஸ்வரன் கதைக்கு நாயகனாகும் லோகேஷ் கனகராஜ்… படத்திற்காக லோகேஷிடம் இப்படி ஒரு விஷயத்தை செய்ய சொன்னாரா இயக்குனர்…

- Advertisement -

ராக்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். தரமணி வசந்த் ஹீரோவாக நடித்த இந்த திரைப்படத்தில் பாரதிராஜாவுக்கும் முக்கிய ரோல் கொடுக்கப்பட்டிருந்தது. இதன் ட்ரெய்லரே பலரையும் ஈர்க்கும் வகையில் அமைந்தது. ஆனால் அது படத்தில் நடக்கவில்லை. அதீத வன்முறை காட்சிகளால் அந்த திரைப்படம், பலருக்கும் சென்று சேராமல் போனது.

இதனைத் தொடர்ந்து, கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோரை வைத்து சாணிக்காயிதம் திரைப்படத்தை இயக்கியிருந்தார் அருண் மாதேஸ்வரன். ரத்தம் சொட்ட சொட்ட வன்முறை தெறிக்க இந்த திரைப்படத்தை அவர் எடுத்திருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது.

- Advertisement -

முந்தைய திரைப்படம் போன்று இதிலும் அதீத வன்முறையை காட்டி இருந்தார் அருண் மாதேஸ்வரன். சொல்லப்போனால் வன்முறைக்கு பெயர் பெற்ற இயக்குனர் என தனது இரண்டு திரைப்படங்களின் மூலம் அவர் சொல்லப்பட்டார். இப்படியான சூழலில்தான் அவர் தனுசை வைத்து கேப்டன் மில்லர் என்னும் திரைப்படத்தை இயக்கினார். இதற்கான தனுஷின் கெட்டப்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்தும், சாதிய அடக்கு முறையை பற்றியும் இந்த திரைப்படத்தில் விளாவாரியாக விளக்கி இருந்தார் அருண் மாதேஸ்வரன். இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் வெற்றிக்கொடி நாட்டவில்லை.

- Advertisement -

படத்தின் திரைக்கதை சற்று மெதுவாக நகர்ந்ததால், கேப்டன் மில்லர் அந்த அளவுக்கு பெயர் வாங்கவில்லை. இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக தனுசுடன் மீண்டும் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த முறை யாருமே எதிர்பார்க்காத வகையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அவர் படமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சியில் வெற்றிமாறன் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. இப்படியான சூழலில் அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜை ஹீரோவாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார். தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே சுருதிஹாசன் உடன் இனிமேல் என்னும் ஆல்பத்தில் நடித்திருக்கிறார். இப்படியான சூழலில்தான் அவர் அருண் மாதேஸ்வரன் கதையில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என அருண் மாதேஸ்வரன் லோகேஷ் கனகராஜிடம் கூறியிருப்பதாகவும் இதற்கு அவரும் சம்மதித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்