இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற மாஸ்ஹிட் வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுதா கொங்கரா. அவரது இயக்கத்தில் இந்தி எதிர்ப்பு போராட்ட உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, புறநானூறு என்ற படம் உருவாக்க முடிவானது. இதில் நடிகர் சூர்யா நடிக்க கமிட் ஆனார்.
படப்பிடிப்பு துவங்கி சில நாட்கள் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் ஷூடட்டில் பங்கேற்ற சூர்யா, பிறகு கதையில் மாற்றங்களும் திருத்தங்களும் சொன்னார். இதனால் சுதா கொங்கராவுக்கும், சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டார். படமும் அப்படியே டிராப் ஆனது.
இதையடுத்து அதே கதையில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படத்தின் பெயர் புறநானூறு என்பதற்கு பதிலாக வேறு பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகிறது. இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இன்னும் சில மாதங்களில் 25வது படம் ஷூட்டிங் துவங்க உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் ஸ்ரீலீலா ஜோடியாக நடிக்கிறார். வில்லனாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பது உறுதியாகி விட்டது. இயக்குனர்கள் நடிகர் ஆவது மட்டுமின்றி வில்லன் கேரக்டர்களில் நடிப்பது அதிகரித்துள்ளது. கௌதம் மேனன், மிஷ்கின் வரிசையில் அடுத்து லோகேஷ் கனகராஜூம் வில்லன் அவதாரம் எடுக்கிறார்.
இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய 5 படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் படங்களில் ஹீரோக்களை காட்டிலும், வில்லன்களின் நடிப்புதான் மிரட்டலாக இருக்கும். தனது படத்தின் வில்லன்கடள வேற லெவலில் காட்டி ரசிகர்களை மிரட்டி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்திலும், வில்லன்களின் நடிப்பு தரமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதற்கிடையே சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க கமிட் ஆகியுள்ள லோகேஷ் கனகராஜ், நிச்சயமாக வில்லன் நடிப்பில் அதகளம் செய்வார். தரமான சம்பவங்களால், சிவகார்த்திகேயனுக்கு படத்தில் தண்ணி காட்டுவார். சுதா கொங்கரா இந்த படத்தை கனவு படமாக உருவாக்குவதால் அவரும் வில்லன் கேரக்டரை வேற லெவலில் உருவாக்குவார். அதனால் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் பாச்சா பலிக்குமா, படத்தின் உண்மையான ஹீரோ, வில்லனாக நடிக்கும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை மனங்களை வென்று விடுவாரா என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் இப்போதே அதிகரிக்க துவங்கி விட்டது.





