- Advertisement -
Homeபொழுதுபோக்குஏதே... விக்ரம் திரைப்படத்தின் அந்த கதாபாத்திரம் மட்டுமே வெப் சீரிஸ் ஆக எடுக்கப்பட இருக்கிறதா... என்னங்க...

ஏதே… விக்ரம் திரைப்படத்தின் அந்த கதாபாத்திரம் மட்டுமே வெப் சீரிஸ் ஆக எடுக்கப்பட இருக்கிறதா… என்னங்க இது செம்ம ட்விஸ்டா இருக்குது…

- Advertisement -

கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய இடைவேளைக்குப் பிறகு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த திரைப்படம் விக்ரம். உலக நாயகனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தார் அனிருத். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததற்கு முக்கியமான காரணம் திரைக்கதை செதுக்கப்பட்ட விதம் தான்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம், வெற்றி மேல் வெற்றியை கொடுத்தது. இப்படியான சூழலில் தான் லோகேஷ் கனகராஜ், கைதி திரைப்படத்தின் சம்பவங்களை அப்படியே விக்ரம் திரைப்படத்தில் கோர்த்து, லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் அதாவது எல் சி யு என்ற கான்செப்ட்டை அறிமுகப்படுத்தினார்.

அதன்படி கைதி திரைப்படத்தில் காவல் அதிகாரியாக வந்த நரேன், விக்ரமிலும் கமல்ஹாசன் உடன் கைகோர்த்து இருந்தார். இதே போல் அன்பு கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அர்ஜுன் தாசுக்கும், விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்சில் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்தான் கார்த்தியின் டில்லி கதாபாத்திரம் குறித்து கூறுவார்.

விக்ரம் திரைப்படம் அடுத்த தளத்திற்கு செல்ல மிக முக்கியமாக காரணமாக இருந்தது சூர்யா தான். ரோலக்ஸ் கதாபாத்திரம் அந்த அளவுக்கு கனமாக அமைந்தது. வெறும் பத்து நிமிடங்கள் சூர்யா வந்து போனாலும் அவரது வசனங்களும், பின்னணி இசையும், அந்தக் காட்சி எடுக்கப்பட்ட விதமும் திரைப்படத்திற்கு வலு சேர்த்தன.

விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து லியோவிலும் எல் சி யு கான்செப்ட்டை கொண்டு வந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் இந்த கான்செப்ட் திணிக்கப்பட்டது என்று பலரும் கருத்து கூறினார்கள். இது பற்றி அண்மையில் பேட்டியளித்திருக்கும் லோகேஷ் கனகராஜ், லியோ திரைப்படத்தில் ஒரு தமிழ் பேசும் போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரம் தேவைப்பட்டது என்றும், அதற்குத்தான் நெப்போலியன் ரோலை பயன்படுத்தியதாகவும் விளக்கி இருந்தார்.

இதனிடையே, விக்ரம் திரைப்படத்தில் ஃபேமஸ் ஆன டீனா கதாபாத்திரத்தை வைத்து ஒரு தனி வெப் சீரிஸ் எடுக்க இருப்பதாக சொல்லி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆனால் இதை அவர் இயக்கப் போவது இல்லையாம். வேறொரு இயக்குனர்தான் இதனை எடுப்பார் என்று லோகேஷ் தெரிவித்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் டீனா கதாபாத்திரத்தை வைத்தே வெப்சீரிஸா என்று ஆச்சரியப்படுகின்றனர்.

சற்று முன்