- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படத்துல முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிடாதீங்க... அப்போ வருத்தப்படுவீங்க... சஸ்பென்ஸை போட்டு உடைத்த...

லியோ படத்துல முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிடாதீங்க… அப்போ வருத்தப்படுவீங்க… சஸ்பென்ஸை போட்டு உடைத்த லோகேஷ் கனகராஜ்…

- Advertisement -

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடித்திருக்கும் திரைப்படம் லியோ. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொட்டதை எல்லாம் வெற்றி படங்களாக்கிய லோகேஷ் கனகராஜ்தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். செவன் ஸ்டார் நிறுவனம் சார்பில் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்க, அனிருத் இசை அமைத்துள்ளார்.

லியோவிலிருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளன. இதன் வரிகளை, லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் விஷ்ணு எடவன்தான் எழுதியிருக்கிறார். இதில் பேடாஸ் பாடல் தான் விஜய்க்கு மிகவும் பிடித்தமானது என்று அவர் தெரிவித்து இருந்தார். லியோ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஏற்கனவே நெட் பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியது.

- Advertisement -

சமீபத்தில் லியோவில் இருந்து ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை பலருக்கும் முகசுழிப்பை ஏற்படுத்த, எதிர்ப்புகள் வலுத்ததால் அந்த டயலாக்கை படக்குழு மியூட் செய்து விட்டது. கதைப்படி காஷ்மீரில் பார்த்தி என்னும் கதாபாத்திரத்தில் அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார் விஜய்.

அவருக்கு மனைவியாக திரிஷாவும், மகனாக மேத்யூ தாமஸும் வருகின்றனர். போலீஸ் அதிகாரியாக கௌதம் மேனன் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் வருகிறார். பார்த்தியாக வாழும் விஜய் தான் ஒரு காலத்தில் லியோ என்று கூறி அவரை வில்லன் கும்பல் விடாமல் துரத்துகிறது. இதில் ஆண்டனி தாஸாக சஞ்சய் தத்தும், ஹரால்டு தாஸ் ஆக அர்ஜுனும் வில்லன்களாக மிரட்டுகின்றனர்.

- Advertisement -

ட்ரெய்லர் மூலம் இதன் காட்சிகள் உறுதிப்படுத்தப்பட, பலரும் லியோவின் ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர். வரும் 19ஆம் தேதி படம் வெளியாகும் நிலையில், அதற்கான முன்பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது. படத்தில், ட்ரெய்லரைத் தாண்டி நிறைய புதிய விஷயங்கள் உள்ளது என்று ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்திருக்கும் அவர் கூறியதாவது, லியோ திரைப்படத்தின் முதல் 10 நிமிட காட்சியை ஆடியன்ஸ் மிஸ் பண்ணி விடாதீர்கள். ஏனென்றால் அந்த ஒரு காட்சிக்காக ஆயிரம் பேர் உழைத்து உள்ளோம். அதனால் தயவுசெய்து திரையரங்குகளில் அமைதியாக உட்கார்ந்து அந்தக் காட்சியை ரசியுங்கள். இதற்காகத்தான் கடந்த அக்டோபரில் இருந்து இந்த அக்டோபர் வரை நாங்கள் உழைத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இயக்குநரே இப்படி கூறியிருப்பதால் அதில் என்ன ஆச்சரியம் காத்திருக்கிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்