- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படம் எல்சியூவா இல்லையா?.. லோகேஷ் கனகராஜ் சொன்ன சீக்ரெட் இதுதான்.. ரசிகர்கள் குழப்பம்

லியோ படம் எல்சியூவா இல்லையா?.. லோகேஷ் கனகராஜ் சொன்ன சீக்ரெட் இதுதான்.. ரசிகர்கள் குழப்பம்

- Advertisement -

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த மேக்கிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக படத்துடைய திரைக்கதை அட்டகாசமாக இருந்தது. அதனை பார்த்த ரசிகர்களும், திரைத்துறையினரும் ஒரு இயக்குநருக்கு திரைக்கதைதான் முக்கியம். அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். எனவே இன்னும் பல வருடங்கள் இவர் நிலைப்பார் என்று ஆரூடம் கூறினார்கள்.

அதற்கேற்றபடிதான் அவரது கிராஃபும் இருக்கிறது. இரண்டாவது படமாக அவர் இயக்கிய கைதி திரைப்படம் மெகா ஹிட் ஆனது. அதிலும் தன்னுடைய திரைக்கதை திறமையை அழுத்தம் திருத்தமாக உணர்த்தியிருந்தார். தொடர்ந்து இயக்கிய மாஸ்டர் படம் நார்மலான திரைக்கதைதான் என்றாலும் படம் ஹிட்டடித்துவிட்டது.

- Advertisement -

லோகேஷ் கனகராஜின் கரியரில் முக்கியமான படம் விக்ரம். அவரது கரியருக்கு மட்டுமில்லை கமல் ஹாசனின் கரியரிலும் அது அவருக்கு முக்கியமான படம்தான். மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அந்தப் படத்தின் உச்சபட்ச ஹைலைட்டாக திரைக்கதை அமைந்திருந்தது. ஏனெனில் ஹாலிவுட்டில் எப்படி சினிமாட்டிக் யுனிவெர்ஸ் இருக்கிறதோ அதேபோல் கோலிவுட்டிலும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கியிருக்கிறார்.

அதன் மூலம் விக்ரம் படத்தில் பழைய விக்ரம் கேரக்டர்களையும், கைதி பட கேரக்டர்களையும் இணைத்தார். அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. எனவே அந்தப் படத்துக்கு பிறகு அவர் உருவாக்கியிருக்கும் லியோ படம் எல்சியூவில் வருமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்புகின்றனர். படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. எனவே படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகளை கொடுக்கிறார் லோகேஷ்.

- Advertisement -

அப்படி ஒரு பேட்டியில் எல்சியூ குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “ரொம்ப சிறியதாக ஒன்றை பண்ணிவிட்டு எல்சியூனு சொன்னால் அது ரசிகர்களுக்கு திருப்தி இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது.எல்சியூ படமாக இல்லாமல் வேறு எதோ இருக்கே என்று ஏமாந்துவிடுவார்கள். அதனால் அதுகுறித்து இப்போதுவரை எதுவும் பேசவில்லை.

இதுவரை இரண்டு படங்கள்தான் லோகேஷ் யுனிவர்ஸில் வந்திருக்கின்றன. கைதி, விக்ரம் தவிர்த்து மூன்றாவதாக எந்தப் படமும் வரவில்லை. எல்சியூவில் மொத்தம் 5 படங்கள்வரை வெளியாகி அது உறுதியானால் மட்டுமே நாம் தைரியமாக எல்சியூ பற்றி அறிவிக்க முடியும். இப்போதைக்கு எல்சியூ ஆரம்பம் மட்டுமே. அதனால் அதனை கெடுக்காமல் இருப்பதே சிறந்தது என்று நினைக்கிறேன்” என்றார்.அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் லியோ எல்சியூவில் வருதா இல்லையா என்ற குழப்பத்துக்குள் சென்றிருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்