- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனிமேல் அதை முடிவு செய்துவிட்டு நான் படம் எடுக்க கூடாது, தனது தவறை பகிரங்கமாக...

இனிமேல் அதை முடிவு செய்துவிட்டு நான் படம் எடுக்க கூடாது, தனது தவறை பகிரங்கமாக ஒத்துக்கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – லியோ தந்த பாடமா பாஸ்?

- Advertisement -

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதுவரை ஐந்து படங்களை இயக்கி இருக்கிறார். இனி 6வது படமாக ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி 171 படத்தை இயக்க போகிறார். வரும் 2024ம் ஆண்டு மார்ச் இறுதியிலோ, அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ படப்பிடிப்பை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஸ்கிரிப்டை அவர் இப்போது எழுதி வருகிறார்.

மாநகரம் படம் மூலம் தனது சினிமா கேரியரை துவக்கிய லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை தொடர்ந்து லியோ படத்தை இயக்கினார். வசூலில் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாயை நெருங்கிய இந்த படம், மாபெரும் வசூல் சாதனை படைத்தது என்றால் அது மிகையல்ல. அதே போன்ற ஒரு வசூல் சாதனை தான், ரஜினி 171 படத்தின் இலக்காகவும் உள்ளது.

இதுவரை இயக்குநராக இருந்த லோகேஷ் கனகராஜ் இப்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ள அவர், சமீபத்தில் பைட் கிளப் என்ற படத்தை தயாரித்துள்ளார். டைரக்டர் அப்பாஸ் ரஹமத் இயக்கிய இந்த படத்தில் உறியடி விஜயகுமார் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

கடந்த 2ம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதில் 1985ல் வெளிவந்த விக்ரம் படத்தில் இடம்பெற்ற ஏஞ்சோடி மஞ்சக்குருவி பாடல் காட்சியுடன் அதிரடி சண்டை காட்சி இடம்பெற்றது ரசிகர்ளை மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது. ஆக்சன், அதிரடி காட்சிகளை நிறைந்த இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் இரண்டு பாடல்களுக்கு ரசிகர்களுக்கு ஆரவாரமான வரவேற்பு கிடைத்துள்ளது, படத்தின் நாயகன் உறியடி விஜயகுமார், தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் இந்த பைட் கிளப் படத்துக்கான பிரமோ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். இந்த படம் அதிக எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து இயக்குநர், தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், லியோ படத்தின் 2ம் பகுதி விமர்சனத்தை நான் ஏற்றுக்கொண்டேன். இனி இதுபோல் ஆக கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். இனிமேல் வெளியீட்டு தேதியை முடிவு செய்துவிட்டு படத்தை எடுக்க கூடாது. இறுதி நேர அழுத்தங்கள் இல்லாமல் இருந்தால், இதுபோன்ற குளறுபடிகள் நடக்காது. இவ்வளவு வேகம் வேண்டாம், நிதானம் தேவை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன், என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்