- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி படத்துக்கு பிறகு, இதை செய்யப் போவது இல்லை, இப்போதே அதிரடி முடிவை எடுத்துவிட்ட இயக்குநர்...

ரஜினி படத்துக்கு பிறகு, இதை செய்யப் போவது இல்லை, இப்போதே அதிரடி முடிவை எடுத்துவிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – லியோ தந்த பாடமா ப்ரோ?

- Advertisement -

வெற்றியின் உச்சாணி கொம்பில் ஏறிய ஒருவர், திடீரென விழுந்து மண்ணை கவ்வினால், சுற்றி இருப்போர் கைகொட்டி சிரித்து விடுவர். ஆனால் அதுவரை அவரது கடும் முயற்சியால், திறமையால், உழைப்பால் கஷ்டப்பட்டு தொட்ட உயரத்தை அப்போதே மறந்துவிட்டு ஏளனம் செய்து விடுவர். இது சினிமாவில் அடிக்கடி நடக்கிற ஒன்றுதான்.

ஒரு பிரபல நடிகர், மிகப்பெரிய வெற்றிப் படத்தை தந்துவிட்டால் அவரை தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடுவதும், அவரே தோல்வி படங்களை தந்துவிட்டால், மிக ஏளனமாக விமர்சிப்பதும் நடந்துக்கொண்டே இருக்கிறது. இது நடிகர்களுக்கு மட்டுமின்றி, சில வேளைகளில் இயக்குநர்களுக்கும் பொருந்தும்.

- Advertisement -

மாநகரம் என்ற படத்தில், புதுமுக இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே யாரு இவரு, என்ற ஆச்சரியப்படும் அளவுக்கு தன் திறமையை பளிச்சிட வைத்தார். அடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களால், அடுத்தடுத்த உயரங்களை தொட்டார். அவரது வெற்றிகளை பார்த்து மலைத்துப் போன ரஜினிகாந்த், தனது 171 வது படத்தை இயக்கும் வாய்ப்பை, அவரே தந்து இருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் திரைக்கு வந்தது. முதல் நாளில் 148.5 கோடி ரூபாயை வசூலித்த இந்த படம், ஏழு நாட்களில் 461 கோடி ரூபாய் வசூலை அள்ளி சாதனை படைத்தது. இப்போது 12 நாட்களில் லியோ படத்தின் மொத்த வசூல், 540 கோடி ரூபாயை கடந்து இருக்கிறது. அமெரிக்காவில் லியோ, 5 மில்லியன் யுஎஸ் டாலர்கள் ( ரூ. 41.50) வசூல் செய்திருக்கிறது.

- Advertisement -

இப்போது, தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி 170 படத்தில் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி 171 படத்தில் ரஜினி நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய முடிவை எடுத்து இருக்கிறார். அதாவது, ரஜினி 171 படத்துக்கு பிறகு, ஆறு மாதங்களுக்கு தனது டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கமே வருவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். விக்ரம் படம் ரிலீஸ் ஆன போதும். இதே முறையை அவர் கையாண்டார். இப்போது, ரஜினி படத்துக்கு பிறகும் அதே முடிவை எடுத்துள்ளார். லியோ படம் நடத்திய பாடம் கூட, இப்படி ஒரு முடிவை லோகேஷை எடுக்க வைத்திருக்கலாம் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்