நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் விக்ரம். இந்த படத்தில் கிளைமேக்ஸில் ரோலக்ஸ் என்ற கேமியோ ரோலில் நடித்திருந்தார் சூர்யா. அதன்பிறகு அவரது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கு முன்பு வந்த படங்களில் சூரரைப் போற்று படம் மட்டுமே வெற்றிப் படமாக இருந்தது. அதனால் நீண்ட நாட்களாக சூர்யா ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில், கங்குவா படத்தில் நடித்து வந்தார் சூர்யா. இந்த படம் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. இந்த படத்தின் விஎப்எக்ஸ் தொழில்நுட்ப காட்சிகள் சற்று சொதப்பலாக வந்ததால், அதை மீண்டும் சரிசெய்ய சூர்யா, டைரக்டர் சிறுத்தை சிவாவிடம் வலியுறுத்தியதால் அந்த பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை படத்தின் டீசர் வௌியானது.
இந்த படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளம் உரிமம் பெற்றுள்ளது. அதனால் இந்த படம் குறித்த முக்கிய தகவலை அந்நிறுவனம் டிவீட் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதாவது 1700ம் ஆண்டுகளில் வாழ்ந்த கங்குவா, 2023ம் ஆண்டில் தனது மெஷினை முடிக்க வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இதுவும் டைம் டிராவல் கதையாக தான் வந்துள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த 2022ம் ஆண்டில் தெலுங்கில் வெளிவந்த வரம் பிம்பிசாரா. நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா நடிப்பில் வெளிவந்த இந்த படம், டைம் டிராவலை அடிப்படையாக கொண்ட மாயஜால கதை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அந்த படத்தின் காப்பியாகவே இந்த கங்குவா படமும் இருப்பதாகவும் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.
இந்த படத்தின் கதையின் சுருக்கத்தை ஓடிடி நிறுவனத்துக்கு கொடுத்த நிலையில் அதை அப்படியே டிவீட் ஆக உளறிக்கொட்டி படம் வெளிவரும் முன்பே, தங்களது படம் பற்றிய ரகசியங்களை போட்டுடைத்து விட்ட அமேசான் பிரைம் நிறுவனம் மீது படக்குழுவினர் பயங்கர அதிருப்தியில் இருக்கின்றனர். கங்குவா படத்தை தான் சூர்யா மலை போல நம்பி இருக்கிறார். அதுவும் ஏமாற்றி விட்டால் என்ன செய்வது என அவரது ரசிகர்கள் இப்போதே புலம்பத் துவங்கி விட்டனர்.
அதுமட்டுமின்றி இதே போன்ற ஒரு கதையமைப்பில், சில ஆண்டுகளுக்கு முன் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்த காஷ்மோரா என்ற படமும் வெளியானது. அதுவும் இதே போன்ற கதை தான். இப்படி பிம்பிசாரா, காஷ்மோரா என பழைய வண்டியை புது பெயிண்ட் அடித்து கங்குவா படமாக மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறார்களே, என்பதுதான் பெரும்பாலான ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.





