- Advertisement -
Homeபொழுதுபோக்குஒர்க் பிரம் ஹோம் அரசியல் நடத்துகிறாரா நடிகர் விஜய்? கடும் விமர்சனங்களுக்கு பதிலடி தயாரான தளபதி...

ஒர்க் பிரம் ஹோம் அரசியல் நடத்துகிறாரா நடிகர் விஜய்? கடும் விமர்சனங்களுக்கு பதிலடி தயாரான தளபதி – அடுத்த லிஸ்ட் தயாராகுது!

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது தனது 69வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என தற்காலிக பெயர் வைத்து உருவாகி வரும் இந்த படம்தான் விஜயின் கடைசி படமாக இருக்கும். ஏனெனில் இந்த படத்துக்கு பிறகு இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை. அரசியலில் முழு கவனம் செலுத்தப் போகிறேன் என்று விஜய் ஏற்கனவே அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையே சில தினங்களுக்கு முன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 300 குடும்பங்களுக்கு தனது பனையூர் தவெக அலுவலகத்தில் வைத்து நிவாரணப் பொருட்களை விஜய் வழங்கினார். இது இணையத்தில் வைரலானது. நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய விஜய், அவரது கையால் நிவாரண பொருட்களை தந்தார்.

- Advertisement -

இதையடுத்து, நடிகர் விஜய் ஒர்க் பிரம் ஹோம் முறையில் அரசியல் கட்சியை நடத்துகிறார். விக்கிரவாண்டியில் அரசியல் மாநாடு நடத்தியதற்காக விவசாயிகளை, கட்சி நிர்வாகிகளை பனையூர் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விருந்து வழங்கினார். இப்போது நிவாரண பணிகளுக்கும் மக்களை பனையூர் அலுவலகத்துக்கு வரவழைத்துள்ளார் என்றும் விமர்சனம் எழுந்தது.

ஆனால் பனையூரில் மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பணிகளை வழங்கிய விஜய், நான் நீங்கள் இருக்கும் இடங்களுக்கு நேரில் வந்து நிவாரண பொருட்களை வழங்கினால், அங்கு மக்கள் கூட்டம் கூடிவிடும். உங்களுக்கும் கூட்ட நெரிசலில் சிக்கி கஷ்டப்பட நேரிடும். அதனால்தான் இங்கு வரவழைத்து உங்களை எல்லாம் நேரில் பார்த்து, உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிகிறேன், தவறான நினைக்க வேண்டாம் என்று தெளிவாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

எனினும் விஜய் இப்படி பனையூர் கட்சி அலுவலகத்துக்கு மக்களை நேரில் வரவழைத்து எதையும் செய்வது என்பது இப்போது பேசுபொருளாகி விட்டது. மக்களை அவர்களது இடத்துக்கே சென்று சந்திப்பதே ஒரு தலைவனுக்கு பெருமை, அவர்களுக்கு நேரில் சென்று உதவி செய்வதே சரியான உதவி என்றும் விமர்சித்து வருகின்றனர்.

இதையடுத்து நடிகர் விஜய் இப்போது அதிரடி முடிவெடுத்துள்ளார். கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருநெல்வேலிக்கு நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கிய போல, மழையால் அதிகம் பாதிப்படைந்த திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கடலூர் மாவட்டங்களுக்கு நேரில் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இந்த பயண திட்டத்துக்கான லிஸ்ட் தயாரிக்க கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்