- Advertisement -
Homeபொழுதுபோக்குபி வாசு படத்தை காப்பாற்றிய இறைவன் அந்த ஹீரோதான்- குடும்பமாக, குழந்தைகளோடு என் படத்துக்கு வராதீங்கன்னு...

பி வாசு படத்தை காப்பாற்றிய இறைவன் அந்த ஹீரோதான்- குடும்பமாக, குழந்தைகளோடு என் படத்துக்கு வராதீங்கன்னு சொன்னதால் குட் ரிசல்ட்

- Advertisement -

எப்போதுமே, பள்ளி விடுமுறை காலத்தில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடித்த படங்கள் வெளியாகின்றன. இதற்கு முக்கிய காரணம், பள்ளி விடுமுறையில் குழந்தைகள், பெற்றோர்கள் என குடும்பம் குடும்பமாக அதிகளவில் ராகவா லாரன்ஸ் நடித்த படங்களை பார்க்க தியேட்டர்களுக்கு வருகின்றனர். பேய் கதை படங்களாக இருந்தாலும், இதில் குழந்தைகள் ரசிக்கும்படியான காட்சிகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக, படத்தில் நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது.

அந்த வகையில் முனி படத்தில் துவங்கி காஞ்சனா 3 வரை, பல திகில் படங்களை தந்து வருபவர் ராகவா லாரன்ஸ். அதுமட்டுமின்றி மற்ற இயக்குநர்களின் பேய் படங்களிலும், ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். அந்த படங்களும் வெற்றி பெறவே செய்கின்றன. இப்படி பேய் படங்கள் என்றால், தமிழ் சினிமாவில் அது ராகவா லாரன்ஸ் படங்கள்தான் என சிறப்பு முத்திரை குத்தப்பட்டு விட்டன.

கடந்த செப்டம்பர் 28ம் தேதி, பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படம் வெளியானது. இது, 18 ஆண்டுகளுக்கு முன் வந்த சந்திரமுகி படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில், படத்தின் பெயரை தவிர அந்த படத்துக்கும், இந்த படத்துக்கும் சிறிதும் சம்பந்தமில்லை.

சந்திரமுகி 2 படத்தை பார்த்த ஒரு தரப்பினர், ராகவா லாரன்ஸ் ஒருவருக்காக பார்க்கலாம் என்கின்றனர். ஒரு தரப்பினர், படத்தின் நாயகி கங்கனா ரனாவத் நடிப்பு நன்றாக உள்ளது என்கின்றனர். ஒரு சிலர் இந்த படத்தில் மீண்டும் நடித்துள்ள வடிவேலுவுக்காக பாரக்கலாம் என்கின்றனர். ஒரு சிலர், பி வாசு சந்திரமுகி பேரை சொல்லி ஏமாற்றி விட்டார் எனவும் கூறி வருகின்றனர்.

இப்படி கடுமையான, கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் சந்திரமுகி 2 படத்தை பொருத்த வரை, வசூல் சற்று திருப்திகரமாக இருப்பதாகவே தெரிகிறது. சமீபத்தில் வந்த ஜெயம்ரவி- நயன்தாரா நடித்த இறைவன் படம் சொதப்பி விட்டதால், இரண்டு தியேட்டர்கள் உள்ள பல காம்ப்ளக்ஸ்களில், இறைவன் படம் பார்க்க வரும் பலரும், கடைசி நேரத்தில் சந்திரமுகி 2 பார்த்துவிடலாம் என்ற திடீர் முடிவுக்கு மாறுவதாக கூறப்படுகிறது.

ஏனெனில், ரஜினி நடித்த டைட்டில், பி வாசு இயக்கம், ராகவா லாரன்ஸ் நடித்த படம் என்ற சில விஷயங்களால், சந்திரமுகி 2 படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் கூடுதல் தகவலாக சந்திரமுகி 2 படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அல்லது குறிப்பிட்ட தேதியில் இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. எனவே, தியேட்டர்களில் சந்திரமுகி 2 பார்க்காத ரசிகர்களை, வீடுகளுக்கே வந்து சந்திக்க இருக்கிறாள் சந்திரமுகி.

சற்று முன்