- Advertisement -
Homeபொழுதுபோக்குபழைய படங்களுக்கு ரசிகர்கள் தரும் அமோக வரவேற்பு, திடீரென ரி ரிலீஸ் செய்யப்படும் பிரபல...

பழைய படங்களுக்கு ரசிகர்கள் தரும் அமோக வரவேற்பு, திடீரென ரி ரிலீஸ் செய்யப்படும் பிரபல நடிகர்களின் படங்கள் – கலெக்சன் அள்ளுதாமே பாஸ்?

- Advertisement -

தமிழ் சினிமாவில், சில படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் போதிய வரவேற்பை பெறாமல் போய்விடும். ஒரு காலகட்டத்துக்கு பிறகு அந்த படங்கள், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய் பேசப்படும் படமாக மாறிவிடும். அப்படி நிறைய படங்களை சொல்லலாம்.

குறிப்பாக சுந்தர் சி. இயக்கத்தில் கமல் நடித்த அன்பே சிவம், தியேட்டர்களில் போதிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெறவில்லை. ஆனால், இப்போது அந்த படத்தை கமல் ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினருமே பார்த்து, பார்த்து ரசிக்கின்றனர். அதனால், டிவி சேனல்களில் அந்த படத்தை அடிக்கடி காண முடிகிறது.

- Advertisement -

அதே போல் கமல் நடிப்பில் வெளிவந்த ஹேராம், ஆளவந்தான், விஸ்வரூபம் 2 படங்களும், தியேட்டர்களில் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. இப்போது, ரசிகர்கள் அந்த படங்களை டிவியில் அடிக்கடி பார்க்கின்றனர். இதற்கு காரணம், அந்த படம் ஓரிரு முறை பார்க்கும்போதுதான் ரசிகர்களிடம் முழுமை பெற்று, அவர்களை நிறைவு செய்வதாக தெரிகிறது.

சமீபத்தில், தனுஷ் நடித்த வடசென்னை படம், சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் ரி ரிலீஸ் செய்யப்பட்ட போது, கூட்டம் அலைமோதியது. டிக்கெட் கலெக்சன் எதிர்பார்த்ததை விட பலமடங்கு இருந்ததை பார்த்து, தியேட்டர் ஓனரே அசந்து போய்விட்டாராம்.

- Advertisement -

அந்த வகையில் நாயகன், தனுஷ் நடித்த புதுப்பேட்டை, ரிலீஸ் ஆகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே ஆகிய படங்கள் நாளை ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படங்களில் புதுப்பேட்டை வன்முறை காட்சிகள் நிறைந்த படமாக முதலில் விமர்சிக்கப்பட்டாலும், இப்போது இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பி ரசித்து பார்க்கின்றனர்.

முன்பெல்லாம் எம்ஜிஆர் சிவாஜி நடித்த படங்கள்தான், பல ஆண்டுகளுக்கு பிறகு ரி ரிலீஸ் செய்யப்பட்டு, தியேட்டர்களில் ரசிகர்களின் அமோகமாக வரவேற்புடன் ஓடும். ஆனால், இப்போது சம காலத்து நடிகர்களின் படங்கள் 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் இடைவெளியில் இப்படி ரி ரிலீஸ் செய்யப்படுவதும், அது மிகப்பெரிய வரவேற்பை பெறுவதும், அதிகரித்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்