ஒரு காலகட்டத்தில் ஆண்கள் கட்டுப்பாட்டில்தான் வாழ்க்கை இருந்தது. இப்போது குடும்ப வாழ்க்கையில் கூட பலரது நிலைமை அப்படி இல்லை என்றே சொல்லலாம். பலரது வீடுகளில், முக்கிய முடிவுகளை எல்லாம் பெண்கள்தான் எடுக்கின்றனர். ஆண்கள் அதற்கு சம்மதிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது பலரது குடும்ப வாழ்க்கையில் நடந்து வரும் நிதர்சனம்.
ஆண்களை பொருத்தவரை ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் கூட பொருளாதாரம் சார்ந்த சில முக்கிய முடிவுகளை கணவன், மனைவி இருவருமே சேர்ந்துதான் எடுக்க வேண்டும். அல்லது மனைவி சொல்லும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். ஆண்களால் இப்படி தனிப்பட்ட முடிவுகளை எடுத்துவிட பல குடும்பங்களில் வாய்ப்பு இல்லை.
இதே சூழலில் அரசியலும் இருந்து வருகிறது, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவர் வெச்சதுதான் சட்டமாக இருந்தது. எதுவாக இருப்பினும் அவரது முடிவாகவே இருந்தது. இது அரசியலிலும் மட்டுமல்ல, அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவராக மட்டுமே முடிவுகளை எடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் தன் உயிர்த் தோழி சசிகலாவின் ஆலோசனைகளை கேட்டுக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
இப்போது இதே சூழ்நிலை சினிமாவிலும் திரும்பியிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் இப்போது ஒரு பெண்ணின் ஆலோசனைப்படிதான் நடந்துக்கொள்கிறார். அவர் பிரபல டான்ஸ் மாஸ்டரின் மனைவிதான் அவரது அன்றாட பணிகளை கவனித்து வருகிறார் என்றும் பேசப்படுகிறது. இதுதவிர கமல் நடத்தும் சில பிஸ்னஸ்களிலும் அவர்தான் நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருவதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் லைக்கா புரடக்சன் நிறுவனம், பல முக்கிய படங்களை தயாரித்து வருகிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, இந்தியன் 3, லால் சலாம், விடாமுயற்சி படங்களை தயாரிப்பது லைகா புரடக்சன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது லைக்கா புரடக்சன்ஸ் சுபாஸ்கரனின் நட்பு வட்டத்துக்குள் நெருங்கிய ஒருவராக, பெண் தயாரிப்பாளர் ஒருவர் வந்து இருக்கிறார். அவரது உத்தரவின்றி அங்கு ஒரு துரும்பு கூட அசைக்க முடியாது என்று இப்போது தெரிய வந்துள்ளது. நிர்வாக பொறுப்பு முழுவதும் அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதனால் அந்த பெண் தயாரிப்பாளரை தேடி வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் இயக்குநர்கள் படை எடுத்து வருகின்றனர். ஆனால் அந்த பெண் தயாரிப்பாளர் யார் என்பது மட்டும் சீக்ரட்டாக இருந்து வருகிறது.





